மாலதி ஓடத்தொடங்கினாள். "ஓடிறு.. ஓடிறுடி" என்ற சத்தம் அவள் காதில்விழுந்துகொண்டே இருந்தது. சிவாவின் வீடு அவள் வீட்டிலிருந்து மூன்றுகிலோமீட்டர் இருக்கும். வீட்டிலிருந்து ரோட்டிற்கு, ரோட்டிலிருந்துமெயின் ரோட்டிற்கு, மெயின் ரோட்டிலிருந்து பைபாஸ், பைபாஸிலிருந்துபத்து நிமிடம் போய்விடலாம் என்று சொல்லிக்கொண்டே ஓடினாள்
கால்களுக்கிடையே ரத்தம் வழிவது தரையில் விழுகிறதா என்றுபார்த்துக்கொண்டே ஓடினாள். என்றைக்கேனும் நடக்கும் என்றுஎதிர்பார்த்தது நடந்தேவிட்டது.
***
மாலதி மூன்றாமாண்டு இயற்பியல் மாணவி. திருச்சியிலிருந்துநாற்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அவள் கிராமத்திலிருந்துகல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்றுவருவாள். கிராமத்திற்கும்நகரத்திற்கும் வணிக வளாகங்களும், திரை அரங்குகளும் மட்டும்தான்வித்யாசம் என்றாகிவிட்ட நிலையில் அவள் ஊர் கிராமத்திற்கும், 'டவுனிற்கும்' இடைப்பட்ட நிலையிலிருந்தது. வீட்டிற்கு ஒரே பெண்என்றாலும் செல்லப் பிள்ளை என்றெல்லாம் இல்லை. அப்பா கட்டிடவேலைகளுக்குச் செல்பவர். அம்மா வயல் வேலைகளுக்கும், வீட்டுவேலைகளுக்கும் செல்வாள்.
***
அம்மாவிடம் சொல்லியே தீருவது என்று முடிவெடுத்தவளாய்படுக்கையிலிருந்து எழுந்தாள். ராத்திரி முழுவதும் தன் மேல் விழுந்தகையின் பாரம் அவளை அழுத்துவதாக எழுந்திருக்க விடாமல் செய்வதாகத்தோன்றியது.
***
தந்தை குடித்துவிட்டு வருகிறார் என்பதைத் தவிர மாலதிக்கு பெரியபுகார்கள் எதுவும் இருந்ததில்லை. "அது வேற என்ன பண்ணும் பாவம்..அதுலதான் அதுக்கு சந்தோசம்ன்னா குடிச்சுட்டுப் போகுது விடு" என்றுஅம்மா ஒரு நாள் சொன்னதிலிருந்து அதைப் பற்றியும் மாலதியோசிப்பதில்லை. சரவணனும் குடித்துவிட்டு ஊரில் இருக்கும் மற்றகுடிகாரர்களைப்போல் வீட்டில் வந்து சண்டைப் போடுவது, பெண்டாட்டிபிள்ளைகளைப் போட்டு அடிப்பது போன்ற எதையும் செய்யமாட்டான்.நேராக ஒரு மூலையில் சென்று படுத்துவிடுவான். போதை தெளியும் வரைமகள் இருக்கும் பக்கம் கூட வரமாட்டான்.
ஆனால் கடந்த ஒரு மாதமாக சரவணனிடம் மாற்றம் தெரிவதாகதோன்றியது மாலதிக்கு. வாரத்தில் நான்கு நாட்கள்குடித்திக்கொண்டிருந்தவன் இரண்டு நாட்களாய் குறைத்ததைப் பார்த்துமாலதியும் அவள் அம்மாவும் சந்தோஷப்பட்டார்கள். அதைத் தவிரவும்அவனிடம் ஏதோ மாற்றம் இருப்பதாய் மாலதிக்கு தோன்றியது. தன்னிடம்அதிகம் பேசுவதில்லை பேசினாலும் முகம் பார்த்து பேசுவதில்லை என்பதைஅவள் சீக்கிரம் கண்டுகொண்டாள்.
ஒரு நாள் வீட்டிற்கு வெளியே கொடியில் போட்டிருந்த துணிகளைவீட்டிற்குள் எடுத்து வைக்கும்படி சரவணனிடம் மாலதி கேட்டாள். பின்ஏதேச்சையாய் வெளியே வந்தவள் சரவணன் கொடியில் கிடந்த தன்பிராவை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, "என்னப்பா... "என்றாள். சட்டென்று திரும்பிய சரவணன் "ஒன்னுமில்ல.." என்றுசொல்லிவிட்டு விறுவிறு என்று வீட்டிற்குள் சென்றுவிட்டான். அவன்போவதையே பார்த்துக்கொண்டிருந்த மாலதி ஒரு பெருமூச்சிற்குப் பின் வீட்டிற்குள் சென்றாள்.
***
சிவாவும் மாலதியும் ஆறாவதிலிருந்து ஒன்றாக படிக்கிறார்கள்.ஆறாவதில்தான் மாலதி படிக்கும் பள்ளிக்கு வந்து சேர்ந்தான் சிவா. சுருள்முடியும், நல்ல சதை வைத்த கன்னமும் சிவாவிற்கு அழகு என்று தன்தோழிகளிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். வெகு சீக்கிரமே இருவரும்நல்ல நண்பர்களானார்கள். பதினொன்றாம் வகுப்பு முடிவில் தன் காதலைசொன்னான் சிவா. மாலதியும் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டாள்.
பள்ளி முடியும் வரை ஒன்றாக பள்ளிக்குப் போவது, வருவது ஒன்றாகஉணவருந்த செல்வது சிரித்து சிரித்துப் பேசுவது சின்ன சின்ன சண்டைகள்போடுவது என்றிருந்த அவர்கள் காதல் கல்லூரிக்குப் போனபின் வேகமாகவளரத்தொடங்கியது. குறிப்பாக சிவாவின் காதல். தனியாய் இருக்க நேரும்ஒவ்வொரு முறையும், " ஒன்னே ஒன்னு.. ஒன்னு மட்டும் குடு ப்ளீஸ்" என்றுகேட்கத் தொடங்கியிருந்தான். மாலதியும் கன்னத்தைக் கிள்ளிவிட்டு, "இப்போதைக்கு இவ்ளோதான்" என்று சிரித்து சமாளிப்பாள்.
***
பொங்கி வரும் கண்ணீரையும் ரத்தத்தையும் துடைத்துக்கொண்டேஓடினாள்..
***
ராத்திரியெல்லாம் யாரோ வீட்டிற்குள் நடந்து கொண்டே இருப்பதாகத்தோன்றியது மாலதிக்கு. ஒரு நாள் யாரென்று பார்த்துவிடுவது என்றநோக்கத்துடன் தூங்காமல் படுத்திருந்தாள். சரவணன் அவள் பக்கத்தில்வந்து நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். சட்டென்று எழுந்து"என்னப்பா எதுக்கு நிக்குற என்ன வேணும் " எனக் கேட்டாள். "ஒன்னுமில்ல.. அங்க ஒரே புழுக்கமா இருக்கு அதான் இங்கபடுக்கலாம்ன்னு வந்தேன் ... தள்ளி படு" என்றான். அன்றிலிருந்து சரவணன்மாலதி பக்கத்தில் படுக்க ஆரம்பித்தான். குடுத்திருந்தாலும்குடிக்காவிட்டாலும்.
***
எப்பொழுதாவது கேட்டது போக அடிக்கடி கேட்க ஆரம்பித்திருந்தான்சிவா. " ஊர்ல உலகத்துல அவன் அவன் என்னென்னவோ பன்றான்...கிஸ்ஸுக்கு உன்கிட்ட கெஞ்ச வேண்டிதாயிருக்கு" என்று கோபப்படத்தொடங்கினான். அவன் சொல்வது நிஜம்தான் என்றாலும் ஏனோமாலதியால் அவள் கோட்டைத் தாண்ட முடியவில்லை. எப்படியோசமாளித்துவந்தாள்.
ஒரு நாள் கோபம் தலைக்கு ஏறியவனாய் கத்தினான் சிவா.
" நீ என்ன நெஜமாவே லவ் பண்றியா? இல்ல லவ் பண்ற மாதிரி நடிக்கிறியா"
" நானும் அதத்தான் கேக்குறேன்.. நீ என்ன லவ் பண்றியா இல்ல வேறஎதுக்காவது ட்ரை பண்றியா" என மாலதியும் திரும்பக் கத்தினாள்.அதன்பின் சிவா அதைப் பற்றி பேசுவதில்லை.
***
கடைசி ஒரு மாத காலத்தில சரவணன் முழுவதுமாகவே மாறியிருந்தான்.தன் மகளையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தவனைப் பார்த்து அவன்மனைவிக்கு சந்தோஷம். மகள் மீது இப்பொழுதாவது பாசம்வந்ததேயென்று. ஆனால், " அப்பா ராத்திரிலாம் மேல கையப் போட்டுட்டேதூங்குறார்மா.. “என்று மகள் அழுதுகொண்டே வந்து சொன்ன பொழுதுஅவளுக்கு திடுக்கென்று இருந்தது. " ஏ,, அதுக்கு எதுக்குடி அழுவுற.. அந்தமனுசன் இப்பத்தான் ஏதோ வீட்ல இருக்கவங்களயும் மதிச்சு ஏதோ சிரிச்சுபேச ஆரம்பிச்சுருக்காரு.. பொண்டாட்டி .. புள்ளன்னு கண்ணு தெரியஆரம்பிச்சுருக்கு.. அதுக்குள்ள ஒப்பாரி வைக்க ஆரம்பிக்குற"
"மேல கை போடுறார்ன்னா எங்க....." அதற்குமேல் சொல்ல முடியாதவளாய்மாலதி அம்மாவைக் கெஞ்சும் பார்வையோடு பார்த்துவிட்டு கல்லூரிக்குகிளம்பிச் சென்றாள். வாயடைத்து மாரடைத்து மகள் போவதையேபார்த்துக்கொண்டிருந்தாள்.
***
சிவா வீட்டில் அவனும் அவன் வயாதான பாட்டியும் மட்டும்தான். பாட்டிக்குகண்கள் தெரியாது. வீட்டிற்கு முன்னும் பின்னும் இரு வாசல். முன் பக்கம்வீட்டின் முன் வண்டி நிறுத்த தட்டி கட்டி கூரை வேய்ந்திருபார்கள். பின்பக்கம் சிறு தோட்டம் உண்டு. மாலதி பின் பக்கமாய் தோட்டித்தின் வழிவந்தாள். எஞ்சியிருந்த பலத்தையெல்லாம் திரட்டி கதவைத் தட்டினாள்.
***
"தொந்தரவு பண்ணாம இருயா.. சோறாக்கி வச்சுருக்கேன் திண்ணுட்டுதூங்கு.. நான் விடியரதுக்குள்ள வந்தறேன்.. மாலதி பாத்துக்கடி" என்றுசொல்லிவிட்டு போகும் அம்மாவை பார்த்து, " சீக்கிரம் வந்துரும்மா...காலைல நான் காலேஞ் போணும்" என்று கத்தினாள் மாலதி. அம்மா போனபின் மாலதிக்கு இனம் புரியாத பயம் மனதைக் கவ்வியது. சரவணன்குடித்திருந்தான். அம்மா போன பின் சிறிது நேரத்திற்கெல்லாம், " அப்பா..சாப்பாடு வைக்கவா.. நான் சீக்கரம் தூங்கணும்" என சரவணனிடம்கேட்டாள். "வேணாம்.. நீ படுத்துக்க" என்று சரவணன் சொல்ல மாலதிக்குகொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பாயை விரிக்கப் போனவளிடம்அப்பாவுக்கும் தலவாணிய போடு என்று சரவணன் சொல்ல வேர்க்கத்தொடங்கியது.
பிள்ளையைத் தனியாக விட்டு வந்துவிட்டோமே என்று மாலதியின்அம்மாவிற்கு கவலையாகவே இருந்தது. பக்கத்து தெருவில் இருந்த கிழவன்ஒருவன் இறந்துவிட்டான். காலையில் பிள்ளைகள் வரும் வரை துணைக்குவருமாறு கூப்பிட்ட கிழவியிடம் வருவதாய் சொல்லி அனுப்பியதிலிருந்துஅவள் மனதில் கவலை குடிகொண்டது. எப்படா விடியும் என்றுகாத்திருந்தவள் சேவல் கூவும் சத்தம் கேட்ட நொடி வீட்டை நோக்கிஓடத்தொடங்கினாள். வழி நெடுகிலும், "ஒன்னும் பிரச்சன ஆயிருக்காது"என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டே சென்றாள். வீட்டைஅடைந்தபின் திறந்திருந்த கதவைப் பார்த்தபொழுது சற்று நிம்மதியாய்இருந்தது.
"மாலதி..மாலதி" என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள்நுழைந்தவளுக்கு பேரதிர்ச்சி. இடுப்பிற்கு கீழே துணி எதுவும் இல்லாமல்சரவணன் மாலதி மீது கிடந்தான்.
"அடேய் சண்டாளா.. என்னடா செய்ற பாவி" என்று கத்திக்கொண்டேஅவனை தள்ளி விட்டாள். மாலதி பாதி மயக்கமுற்றவளாய் அம்மா... அம்மாஎன்று ஈன ஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்தாள். அடப் பாவி.. நாசமபோறவனே.. என் புள்ளய என்னடா செஞ்ச.. நீ நல்லாருப்பியா.. அய்யோ..எம் புள்ள.." என்று மாரில் அறைந்து கொண்டு அழுது புரண்டாள். "அம்மா ..அம்மா:.." மாலதியின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
***
கதவைத் திறந்த சிவாவைப் பார்த்ததும் அவனை கட்டிஅணைத்துக்கொண்டாள். அழுவதற்கோ. பேசுவதற்கோ கொஞ்சமும்தெம்பில்லாதவளாய் அல்லது பொங்கிவந்த அழுகையெல்லாம்அடக்கிக்கொண்டு சிவாவை இறுக அணைத்துக்கொண்டாள் இல்லைஅவன் மேல் விழுந்தாள். ஒன்றும் புரியாதவனாய் அவளை வீட்டிற்குள்அழைத்தவனைத் தடுத்து அவன் முகமெல்லாம் முத்தமிட்டாள். சிவா .. சிவாஎன்பதைத் தவிர வேறெதுவும் சொல்லாமல் அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டாள். கரை உடைய காத்திருந்த கண்ணீர் நதியை தன்உயிரைக் கொண்டு அணையிட்டு நிறுத்தி வைத்தாள். அப்பொழுதுசிவாவின் கைலியையும் மீறி பெரிதாகத் தொடங்கியது அவன் ஆண்மை.அதை உணர்ந்த நொடி மாலதியின் உயிர் உடையத் தொடங்கியது.