Friday, June 17, 2016

வைஷ்ணவி


"நீங்கதான கோபி ப்ரெண்ட்" என்று கேட்டபடி என் பின்னாலிருந்து ஒரு குரல். ச்சேரை முன்னால் கொஞ்சம் நகர்த்தி தலையைத் திருப்பிப் பார்த்தேன். இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் சிரித்தபடி "ஹலோ" என்று கை நீட்டினாள். நானும் பதிலுக்கு கையை நீட்ட " நான் கோபி வைப்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
"பேரு..."
"சாரிங்க.. பேர சொல்லல பாருங்க‌... என் பேரு வாசுகி.. இன்னைக்குத்தான் ஜாயின் பண்ணேன்.. அவருதான் என் ப்ரண்ட் இருக்காங்க... நான் சொல்றேன்ன்னு சொன்னார்.. சொன்னாரா?"
" .. யெஸ்.. யெஸ்.. கோபி சொன்னாரு.. நான் தான் மறன்டேன்.. வாசுகி நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்.. நான் ப்ரேக் போகும்போது சொல்றேன்.. அப்ப பாக்கலாமா?" என்றேன். அவளும் சரி என்று போய்விட்டாள். பின் நாள் முழுவதும் வேலை இருந்ததால் நான் அவளை மறந்தே போனேன். வீட்டிற்கு வந்தவுடன் தினேஷ், " என்னப்பா.. கோபி வைப்ப பாத்தியா.. இன்னைக்கு ஜாயின் பன்னிருப்பாளே.. கொஞ்சம் வைஷ்ணவிய பாத்துக்க சொல்லுன்னு காலைல இருந்து ரெண்டுதடவ போன் பண்ணிட்டான்" என்று கேட்டவுடன்தான் எனக்கு வாசுகியின் நியாபகமே வந்தது.
"பாத்தேன்பா.. வேல கொஞ்சம் ஜாஸ்த்தியா இருந்ததால பேச முடில.. நாளைக்குப் பாக்குறேன்" என்றேன். தினேஷ் எதுவும் பேசவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் ஒன்று சொல்லி நான் செய்யாமல் விட்டு அதற்கு அவன் ஒன்றுமே சொல்லாமல் இருந்தது இதுதான் முதல் முறை. தினேஷும் நானும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். மூன்று மாதங்களில் சண்டை இல்லாமல் சென்ற நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் டூவிலர் ஆக்ஸிடண்ட் ஆனபின் இந்த ஒரு மாதமாய் வீட்டிலே இருக்கும் தினேஷால் என்னைத் திட்டாமல் ஒரு நாளும் இருக்க முடிந்ததில்லை. முழங்காலில் அடிப்பட்ட காயம் மட்டும் இன்னும் ஆறாமல் இருந்தது. இரண்டு நாட்களாகத்தான் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறான். அதனால் ஒருவேளை அவன் கோபம் கொஞ்சம் குறைந்திருக்கிறதோ என்னவோ...
ஒன்பது மணிக்கெல்லாம் இருவரும் படுத்துவிட்டோம். "காயம் ஆறும் வரை கீழேயே படுத்துக்கறேன்..காயத்துல புரண்டு படுத்துட்டா கஸ்டம்" என்று சொல்லியிருந்தேன்,  "
"அதான் சரியாயிடுச்சுல்லா.. மேல வந்து படு" பாயை விரிக்க போன என்னை தினேஷின் குரல் தடுத்தது. ஏனோ என்னையும் மீறி ஒரு சிரிப்பு. எங்கே பாத்துவிடப் போகிறான் என்று சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்டேன். கட்டிலின் ஒரு ஓரமாய் படுத்துக்கொண்டேன்.விளக்கை அணைத்த இரண்டாவது நிமிடம்  தினேஷின் கை மேல விழுந்தது.

*******************************************************************************
மற நாள் அலுவலகம் சென்றவுடன் வாசுகியைத்தான் தேடினேன். அவள் வந்திருக்கவில்லைவந்தாள் நிச்சயம் இடத்திற்கு வருவாள் என்று தோன்றியது. வேலையைத் தொடங்கினேன்.
பத்து மணி இருக்கும். நினைத்தது போலவே வாசுகி வந்தாள்.
"சாரி வாசுகி.. நேத்து செம வேல.. போகும்போது சொல்லிட்டு போலாம்ன்னு நினச்சேன். முடியல"
"பரவாலங்க.. இதுல என்ன இருக்கு." என்றாள்.
"காபி சாப்பிட்டு வரலாமா?" எங்கள் ப்ரெளவ்சிங் சென்டரில் இருந்து வெளி வந்தோம். எங்கள் அலுவலகத்தை நாங்கள் அப்படித்தான் சொல்லுவோம். சொல்லப்போனால் அதை விட இட நெருக்கடி இருக்கும் ஒரே அலுவலகம் எங்களுடையதுதான்.
"என்னாச்சு.. லேட்டா வந்துருக்கீங்க.." வாசுகி அதைக் காதில் வாங்கியவள் போல் தெரியவில்லை. தன் மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு இரண்டு நிமிடத்திற்குப் பிறகு, " நீங்க அவரு ப்ரெண்டுதான.. கொஞ்சம் சொல்லக் கூடாதா?" என்றாள்.
நான் குழப்பத்துடன், " என்ன சொல்றீங்க?" எனக் கேட்டேன்.
"தாடின்னா எப்படிங்க இருக்கனும்.. இருக்கற மாதிரியும் இருக்கனும் இல்லாத மாதிரியும் இருக்கனும்.. அப்படி இருந்தாதாங்க பாக்க நல்லா இருக்கும்.. ப்ரீ ஹேர் மாதிரி விட்ருக்காருங்க.. பாக்க சகிக்கல.."
சத்தாமக சிரித்துவிட்டேன். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ஐந்து நிமிடம் ... நிறுத்தவே முடியவில்லை.. "வாசுகி. சாரிங்க.. ரொம்ப சாரி..  நீங்க சொன்னது..."
"பரவாலங்க.. அவர பாத்தா சிரிப்பாத்தான் வரும் உங்களுக்கும்.."
"வெரி சாரிங்க.."
" அத விடுங்க.. ஒரு நாள் பாத்ரூமல குளிச்சுக்கிட்டு இருந்தேன்பாப்பா வந்து கதவ தட்டிக்கிட்டு இருந்தா.. ஏங்க... பாப்பா பாத்ரூம் கிட்ட வந்துட்டா .. வந்து தூக்குங்கன்னு கத்துறேன்... தங்கப்பாப்பா  இங்க வா .. தங்கப்பாப்பா இங்க வான்னு படுத்துக்கிடே கூப்புடுறார்.. ஒன்ற வயசு குழந்தய வான்னா வந்துரும்மா.. யோவ் லூசாயா நீ.ன்னு செம கத்து கத்தி விட்டேன்.”
வாசுகி நீண்ட நாள் பழகியவள் போல் பேசிக்கொண்டே இருந்தாள். ஒரு மணி நேரமேனும் பேசியிருப்பாள். அதில் ஐம்பத்து ஒன்பது நிமிடம் கோபியைப் பற்றிக் குறைக் கூறிக்கொண்டே இருந்தாள். எனக்கு ஆச்சிர்யமாக இருந்தது. பார்த்த ஒரே நாளில் தன் கணவனைப் பற்றி ஒரு பெண்ணிடம் எப்படி இப்படி குறை கூற முடிகிறது அவளால் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன் இடை இடையே வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு. நான் தினேஷை நினைத்துக்கொண்டேன். அவன் இரண்டு நாளைக்கு ஒரு முறை ஷேவ் செய்துவிடுவான். அவனை நான் தாடியில் பாத்ததேயில்லை. இரண்டாவது மாடியில் இருப்பதால் வெளியே போக வேண்டிய எல்லா வேலைகளையும் அவனே செய்வான்என்னை தேவையில்லாமல் கீழே இறங்க விடமாட்டான். என்ன... ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
அடுத்த ஒரு வாரம் முழுவதும் பார்க்கும்பொழுதெல்லாம் வாசுகி கோபியைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தாள். இல்லை புகார் சொல்லிக்கொண்டிருந்தாள். நான் எல்லாவற்றையும் தினேஷிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது," இது சரியா வராதுங்க. நான் எங்க வீட்டுக்கே போயிரலாம்ன்னு பாக்குறேன்" என்றாள்.
"உங்க வீட்டுக்கேன்னா?"
"எங்க அம்மா வீட்டுக்கு."
"என்னங்க சொல்றீங்க .. அப்படில்லாம் பேசாதிங்க..குடும்பம்ன்னா முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும்.. அதுக்காக விட்ற முடியுமா" நான் சற்று பதட்டப்பட்டுத்தான் போனேன். "நீ ஒரே வாரத்துல மூக்க சிந்திக்கிட்டு வீட்டுக்கு வரத்தான் போறடி.. போ.போ". வீட்டை விட்டு வெளியேரும்போது அம்மா சொன்னது ஏனோ அப்பொழுது நினைவுக்கு வந்தது.
அதன் பின் இரண்டு நாடகள் அவளை நான் பார்க்கவிலை. அவள் வேறு டீம் என்பதால் அவள் வந்தாளா இல்லையா என்று கூட தெரியவில்லை.
*******************************************************************************
சனிக்கிழமை. தினேஷ் அவன் வீட்டிற்கு போயிருந்தான். வேலையெல்லாம் பொறுமையாய் ஆரம்பிக்கலாம் என்று பத்து மணி வரை தூங்கினேன்போன் வந்ததுகோபி. போனை எடுத்து ஒரு இரண்டு நிமிடம் எதிர்முனையிலிருந்து ஒன்றுமே கேட்கவில்லை.
"கோபி சொல்லுங்க.. ஹலோ?"
" வைஷ்ணவி.. அவ போய்ட்டா"
"புரியல கோபி.. என்ன சொல்றீங்க?"
" வாசுகி .. அவ அம்மா வீட்டுக்கே போய்ட்டா.. என்ன விட்டுட்டு போய்ட்டா"
கோபி அழத்தொடங்கினார். அவரை சமாதனப்படுத்த முடியவில்லை. " கோபி கவலப்படாதிங்க.. நீங்க கொஞ்சம் தைரியமா இருங்க.. நான் வேனா பேசிப்பாக்கட்டுமா?" என்று கேட்டேன்.
"அதுக்குத்தான்மா உன்ன கூப்ட்டேன்.. எங்க வீட்ல யாருக்கும் தெரியாது.. அவ எப்பவும் போலத்தான் போயிருக்கான்னு நினச்சுகிட்டு இருக்காங்க.. நான் போனா அவ அவமானப்படுத்தி அனுப்சுருவா. போன பன்னா எடுக்க மாட்றா.. நீ இல்ல தினேஷ் இல்லா ரெண்டு பேரும் பேசி அவள கூட்டிட்டு வந்துருங்க வைஷ்ணவி. இந்த ஹெல்ப் மட்டும் செய்ம்மா.. உன்ன டிஸ்டர்ப் பன்ன மாட்டேன் இனி.." என அழுதார்.

"என்ன கோபி.. கண்டிப்பா நானும் தினேஷும் பேசுறோம்.. இப்பவே". கோபி போனை வைத்தப்பி பிறகு தினேஷுற்கு போன் செய்தேன். அவனிடம் விசயத்தைச் சொன்னவுடன் கிளம்பி வந்தான்.
வாசுகி வீடு தாம்பரம் கிழக்கில் உள்ளது. அலுவலகம் முடித்து ஒரு நாள் இருவரும் ஒரே கேப்பில் வந்தோம். அதனால் நேராக அவள் வீட்டிற்கே போவது என்று நானும் தினேஷும் முடிவு செய்தோம்.
வாசுகி வீட்டிற்கு போகும்போது  மணி இரண்டானது. வாசுகிதான் வந்து கதவைத் திறந்தாள். எப்படி ரியாக்ட் செய்வாளோ என்று தயக்கதுடனே போன எங்களுக்கு "வாங்க வைஷ்ணவி.. வாங்க தினேஷ்" என்றது பதட்டத்தைக் குறைத்தது.
நாங்கள் எதற்கு வந்திருக்கோம் என்று புரிந்ததால் வாங்க மாடிக்கு போய் பேசலாம் என்றாள்.
நான் தான் முதலில் ஆரம்பித்தேன். "என்ன வாசுகி..  அன்னைக்கு ஏதோ கோபத்துல சொல்றீங்கன்னு பாத்தா வழக்கம்போலவே வாசுகி சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாதள்போல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஆரம்பித்தாள்.
"அவரு ஆம்பிளையே இல்லிங்க..."
பகீரென்றெது. நான் தினேஷைப் பார்க்க அவன் என்னைப் பார்த்தான். "வாசுகி.. என்ன பேசுறீங்க நீங்க..."
"பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு போய்ட்டா ப்ரெண்ட்ஸ அனுப்பி கூட்டிட்டு வரச் சொல்றவன வேற என்னென்னு சொல்ல சொல்றீங்க"
கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது. ஏன்டா வந்தோமென்று தோன்றியது. இருந்தும் வந்த பாவத்திற்காக கேட்டேன்," நீங்க போன் பன்னா எடுட்ட மாட்றீங்கன்னு சொன்னார்"
"அதுக்கு.. அவர் திருந்த மாட்டார்.. " சிறிது நேர இடைவெளிக்குப்பின் தொடர்ந்தாள்.
" உங்க கிட்ட சொல்றதுல என்ன இருக்கு.. கல்யாணம் ஆகி நாலு மாசம் அவர் என் கிட்டக்கயே வரல.. எப்பப்பாத்தாலும் பட்டயப் போட்டுக்கிட்டு பர்வத மல போறேன்.. திருவண்ணாமல போறேன்னு தாடியும் கீடியுமா சுத்திக்கிட்டு திரிஞ்சார்.. ஒரு நாள் பொறுக்க முடியாம நானே அவர் மேல விழுந்துதான் இந்தப் புள்ளய பெத்தேன்."

தினேஷும் நானும் பேயறைந்தது போல் நின்றோம். எங்களுக்கு அதற்குமேல் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. என்ன முயன்றும் ஒரு வார்த்தைக்கூட அதற்கு மேல் வரவில்லை. என்னைவிட தினேஷ்தான் அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தான். அங்கிருந்து கிளம்பி ஆட்டோவில் வரும்வரை ஒரு வார்த்தைக்கூட அவன் பேசவில்லை. என்னை மட்டும் ஆட்டோ மூன்று மாதங்களுக்கு முன்னால் எங்கள் முதலிரவிற்கு அழைத்துச் சென்றது. காதலித்து திருமணம் செய்து கொண்டவன் கட்டிலில் உடகார்ந்திருக்க ஓடிச்சென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவளைக் கட்டிலில் தள்ளி ஒவ்வொரு ஆடையாய் களைய ஆரம்பித்து என் மேல் படர ஆரம்பித்தவனைத் தடுத்து நீ கீழ நான் மேல என்று சொன்னவுடன் சிரித்துக்கொண்டே சரி என்றவன் காலையில் எழுந்தவுடன் எப்படிடி வெக்கமே இல்லாம அப்படி ஓப்பனா கேட்ட.. அதுவும் அவ்ளோ அனுபவசாலி மாதிரி... இல்ல நிஜமாவே அனுபவம் இருக்கா.." என்று கேட்டது அப்பொழுது மீண்டும் ஒவ்வொரு வார்த்தையாய் தெளிவாய் கேட்டது.