Saturday, January 24, 2015

வேண்டாத விருந்தாளி

எனக்காக எப்போதும் வரும்
இந்த நிலவிடம்
எனக்கொரு காதலும் இல்லை

தேடித் தேடி வந்த போதிலும்
இறகில்லா பறவையைக் காண்பதில்
எனக்குத் துளி விருப்பமுமில்லை

எல்லோரும் கூடடைந்தபின்
இந் நிலவோடு
தனித்திருக்கும் தருணங்களை
நான்
ஒருபோதும் விரும்பியதில்லை

வீடில்லாக் கூறைமேல்
வேண்டாத விருந்தாளி


No comments:

Post a Comment