Saturday, June 6, 2015

யாருக்கு முத்தம்

மழையின் ஈரத்தை வாங்கி
உனக்குப் பரிசளித்தப் பின்
தருவதற்கு
என்னிடம்
இந்த வறண்ட வார்த்தைகளே
மீதமுள்ளன‌
இப்பொழுது
எங்கள் மூவரில்
யாருக்குத் தரப்போகிறாய்
உன் முத்தத்தை
என்பதை
நீயே முடிவுசெய்துகொள்..

No comments:

Post a Comment