மழையில் நனைந்த பின்
தலை துவட்டிக் கொள்ளும்
என்னைப் பார்த்து
சிரிக்கின்றன
பக்கத்து வீட்டிலிருக்கும்
மரங்கள்
அவைகளின் வாயையை
அடைக்க ஒரு கவிதையை
எழுதி வீசினேன்
மடக்கி மடக்கி
எழுதப்பட்ட அதைப்பார்த்துச்
சத்தமாய் சிரிக்கின்றன
ஒரே யடியாய்
வளர்ந்திருக்கும் அவைகள்!