Sunday, April 12, 2015

பின் நவீனத்துவ தற்கொலை

வீடு முழுவதும்
புத்தகங்கள்
கவர் பிரிக்கப்படாமல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஒரு இருபத்தியேழு
அவை மூச்சு முட்டி
இறந்து கொண்டிருக்கின்றன – நான்
புத்தகங்கள் தாசிகளைப் போன்றவை
தொடத் தொடத்தான்
அவை உயிர் வாழும் – நண்பன்
இதை
நான் ஒரு கவிதையாகவும்
அவன்
ஒரு கதையாகவும்
எழுதத்தொடங்கினோம்
அப்பொழுது
ஷெல்ப்பின் மேலிருந்து
ஒரு புத்தகம்
கீழே விழுந்தது
நாங்கள்
தற்கொலை என்று
பெயர் வைத்தோம்

No comments:

Post a Comment