Monday, April 20, 2015

பிறழ்வு

இனி முடியாதென
பேசத் தொடங்குகிறது
மௌனம்
உள்ளிழுக்கப்பட்ட
மூச்சிற்கு
திரும்ப
வழியில்லை
எங்கிருந்தோ
விழுந்து தெறிக்கிறது
உயிரின் பேரருவி
கண்களிலிருந்து
ஒழுகுவதன்
மருஊ
கண்ணீர்
அக்கணமே
உயிருடன்
வெடித்துச் சிதறுகிறது
நான்
அதற்கு முன்
ஒரு குயிலின் கூவலை
கேட்கக் கடவது
என்றென்னைச்
சபித்தது யார்

No comments:

Post a Comment