அவள்
என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
ஆம்
அப்படித்தான் தோன்றுகிறது
அவளுக்கும்
என்னைப் பார்க்க வேண்டும் போலிருந்திருக்கும்
அவள்
என்னிடம் வந்து பேசினாள்
ஆம்
அப்படித்தான் தோன்றுகிறது
அவளுக்கும்
என்னிடம் பேச வேண்டும் போலிருந்திருக்கும்
அவள்
என்னருகில் வந்தமர்ந்தாள்
ஆம்
அப்படித்தான் தோன்றுகிறது
அவளுக்கும்
என்னருகிலேயே இருக்க வேண்டுமென்றிருந்திருக்கும்
அவள்
சிரித்துக்கொண்டே இருந்தாள்
ஆம்
அப்படித்தான் தோன்றுகிறது
அவளுக்கும்
கத்தி அழ வேண்டுமென்றிருந்திருக்கும்
அவள்
அழகான புடவையணிந்திருந்தாள்
ஆம்
அப்படித்தான் தோன்றுகிறது
அவளுக்கும்
அழகாய்த் தெரிய வேண்டுமென்றிருந்திருக்கும்
இன்று
என்னிடம்
அவள் காதல் மட்டுமேயிருக்கிறது
இன்றும்
அவளிடம்
என் காதல் மீதமிருக்கிறது
உங்களுக்குத் தெரியுமா
மரணம் நிகழ்ந்த வீட்டாரிடமும்
மணமாகிவிட்ட பெண்ணிடமும்
'போய் வருகிறேன்'
என்று கூறுவது
எவ்வளவு அபத்தமென்று!!
Friday, May 30, 2014
Monday, May 26, 2014
உண்மை!
பெண்களுக்கான ஒரு கவிதையெழுதி
அவர்கள் உலகமனுப்பி வைத்தேன்
சிறிது நாட்கள் கழித்து
திரும்பி வந்த கவிதை
நிறையவே மாறிவிட்டிருந்தது
உதட்டுச் சாயம்
காதணிகள்
கழுத்தணிகள்
கொலுசு
மல்லிகைப் பூ
இவற்றுடன்
வெட்கமும்
சேர்ந்திருந்தது
பெருமிதத்துடன்
துள்ளிக்குதிக்கையில்
காலில் அடிபட
இரத்தம் சொட்டியது
அப்பொழுது வந்த
படபடப்பும்
பயமும்
சோர்வும்
ஓர் உண்மையை
புரியவைத்தன...
அவர்கள் உலகமனுப்பி வைத்தேன்
சிறிது நாட்கள் கழித்து
திரும்பி வந்த கவிதை
நிறையவே மாறிவிட்டிருந்தது
உதட்டுச் சாயம்
காதணிகள்
கழுத்தணிகள்
கொலுசு
மல்லிகைப் பூ
இவற்றுடன்
வெட்கமும்
சேர்ந்திருந்தது
பெருமிதத்துடன்
துள்ளிக்குதிக்கையில்
காலில் அடிபட
இரத்தம் சொட்டியது
அப்பொழுது வந்த
படபடப்பும்
பயமும்
சோர்வும்
ஓர் உண்மையை
புரியவைத்தன...
Sunday, May 25, 2014
போகட்டும்...
நான் எழுதுவது
கவிதையே இல்லை
எழுதினாலும்
நன்றாக இல்லை
இருந்தாலும்
புரியவில்லை
புரிந்தாலும்
பலன் இல்லை
பார்ப்பவர் இல்லை
படிப்பவர் இல்லை
படிப்பவர்க்கெல்லாம்
அறிவில்லை
என்று படபடத்தான்
நண்பனொருவன்
போகட்டும்...
மனித மலத்தை
மனிதர்களே கழுவும் ஊரில்
மற்றவையெல்லாம்
மணக்கவா செய்யும்?
கவிதையே இல்லை
எழுதினாலும்
நன்றாக இல்லை
இருந்தாலும்
புரியவில்லை
புரிந்தாலும்
பலன் இல்லை
பார்ப்பவர் இல்லை
படிப்பவர் இல்லை
படிப்பவர்க்கெல்லாம்
அறிவில்லை
என்று படபடத்தான்
நண்பனொருவன்
போகட்டும்...
மனித மலத்தை
மனிதர்களே கழுவும் ஊரில்
மற்றவையெல்லாம்
மணக்கவா செய்யும்?
Saturday, May 24, 2014
புனைப் பெயர்
கவிதை எழுதும் எனக்கு
ஒரு புனைப் பெயர் தேவை
காற்று என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
என்னையே இன்னும்
கடந்து போகவில்லையென்பதால்
மழை என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
என் கவிதைகள்
எல்லோர்க்குமானதல்ல என்பதால்
நிலவு என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
மறைந்து
மறைந்து
வாழும் நிலவென்பதால்
மலை என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
அசைத்தலும்
முன் நகர்தலுமே
கவிதையென்பதால்
கடல் என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
குற்றவுணர்வு மேலெழுந்து தடுத்ததால்
என் பெயரையே
வைத்துக்கொள்ள நினைத்தேன்
அதுவும் சரிதான்.
ஒரு புனைப் பெயர் தேவை
காற்று என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
என்னையே இன்னும்
கடந்து போகவில்லையென்பதால்
மழை என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
என் கவிதைகள்
எல்லோர்க்குமானதல்ல என்பதால்
நிலவு என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
மறைந்து
மறைந்து
வாழும் நிலவென்பதால்
மலை என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
அசைத்தலும்
முன் நகர்தலுமே
கவிதையென்பதால்
கடல் என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
குற்றவுணர்வு மேலெழுந்து தடுத்ததால்
என் பெயரையே
வைத்துக்கொள்ள நினைத்தேன்
அதுவும் சரிதான்.
Subscribe to:
Comments (Atom)