நான் எழுதுவது
கவிதையே இல்லை
எழுதினாலும்
நன்றாக இல்லை
இருந்தாலும்
புரியவில்லை
புரிந்தாலும்
பலன் இல்லை
பார்ப்பவர் இல்லை
படிப்பவர் இல்லை
படிப்பவர்க்கெல்லாம்
அறிவில்லை
என்று படபடத்தான்
நண்பனொருவன்
போகட்டும்...
மனித மலத்தை
மனிதர்களே கழுவும் ஊரில்
மற்றவையெல்லாம்
மணக்கவா செய்யும்?
No comments:
Post a Comment