அங்கு ஒரு மரம்தான் இருந்தது
அம்மரத்தில்
ஒரு கிளைதான் இருந்தது
அக்கிளையில் ஒரு இலைதான் இருந்தது
அவ்விலை அருகே
ஒரு கருப்பு இருந்தது
தான் பறவையென்று
பறந்து காட்டியது
என்ன பறவை என்று
கரைந்து காட்டியது
இலை
போல் அசைந்தும் காட்டியது
சிலை
போல் இருந்தும் காட்டியது
ஏனோ
பார்த்தும் பார்க்காமலே போனான்
அந்த
புகைப்படக் கலைஞன்..
Sunday, July 27, 2014
Sunday, July 13, 2014
ஈ_ம்
அந்த ஊரில்
நாங்கள் வாழ்ந்தோம்
அதே ஊரில்
கொலைகளும்
படுகொலைகளும்
கண்ணீரும்
கதறல்களும்
வல்லுறவுகளும்
வல்லூறுகளும்
ரத்த வாய்க்கால்களும்
முள் வேலிகளும்
இன்னும் பிற
கோரங்களும்
வாழ்ந்தன
இன்று
அங்கு மீதமிருப்பது
கால் பரப்பிக் காத்திருக்கும்
காலமெனும் வேசை மட்டுமே
நாங்கள் வாழ்ந்தோம்
அதே ஊரில்
கொலைகளும்
படுகொலைகளும்
கண்ணீரும்
கதறல்களும்
வல்லுறவுகளும்
வல்லூறுகளும்
ரத்த வாய்க்கால்களும்
முள் வேலிகளும்
இன்னும் பிற
கோரங்களும்
வாழ்ந்தன
இன்று
அங்கு மீதமிருப்பது
கால் பரப்பிக் காத்திருக்கும்
காலமெனும் வேசை மட்டுமே
Thursday, July 10, 2014
…..இப்படியாய்:
…..இப்படியாய்
…..இப்படியாய்
…..இப்படியாய்
…..இப்படியாய்
…..இப்படியாய்
எல்லாமும்
வழக்கொழிந்து போகும்
திரு நாளில்
இப்படியாய்:
சுழலத் தொடங்கும்
காலம்….
…..இப்படியாய்
…..இப்படியாய்
…..இப்படியாய்
…..இப்படியாய்
எல்லாமும்
வழக்கொழிந்து போகும்
திரு நாளில்
இப்படியாய்:
சுழலத் தொடங்கும்
காலம்….
அவளின்றி...
வாழ்க்கை
மிக மிக
அருவருப்பாய்
இருக்கிறது
உலகில்
உள்ள
எல்லா விளக்குகளையும்
ஏற்றிய
பின்னரும்
ஒழுகும்
இரவு போல்
ஒழுகிக்கொண்டே
இருக்கிறது
இந்த வலி
ஏமாற்றம்
தான்...
அவள் மீதான
என் காதலில்
நூறில்
ஒரு பங்கு கூட இல்லை
இந்த வலி
அவளை ஸ்பரிசிக்காமல்
உயிரற்றுக் கிடக்கும்
இந்த தேகம்
ஒரு மலக்
குவியல் போல்
துர்நாற்றம் கொள்கிறது...
காற்று
மட்டுமே
என் பக்கம்
வந்து போகிறது...
உடலென்னும்
புதைக்குழிக்குள்
உயிர்
சிக்கிக்கொண்டிருக்கிறது...
சாவுச்
சனியனே
எங்கு தொலைந்தாய்
இல்லை...
என்னில்
இனி
சாவதற்கு
என்ன மீதமிருக்கிறது!!!
Wednesday, July 9, 2014
எப்படியோ
எப்படியோ
ஆடு ஒன்று
பிறந்தது
எப்படியோ
ஒரு ஆடு
சட்டைப் போடக் கற்றுக்கொண்டது
ஒரு கலாச்சாரம் பிறந்தது
எப்படியோ
சட்டையில் இரு பித்தான்கள் தொலைந்தது
ஒரு கலாச்சாரம் பிறந்தது
எப்படியோ
சட்டையில் பித்தான்கள் இல்லாமலானது
ஒரு கலாச்சாரம் பிறந்தது
மழையிலோ
காற்றிலோ
எப்படியோ
சட்டையின் நிறம் மாறியது
ஒரு கலாச்சாரம் பிறந்தது
எப்படியோ
சட்டை அவிழ்ந்து விழுந்தது
ஆடு பிறந்தது
ஆடு ஒன்று
பிறந்தது
எப்படியோ
ஒரு ஆடு
சட்டைப் போடக் கற்றுக்கொண்டது
ஒரு கலாச்சாரம் பிறந்தது
எப்படியோ
சட்டையில் இரு பித்தான்கள் தொலைந்தது
ஒரு கலாச்சாரம் பிறந்தது
எப்படியோ
சட்டையில் பித்தான்கள் இல்லாமலானது
ஒரு கலாச்சாரம் பிறந்தது
மழையிலோ
காற்றிலோ
எப்படியோ
சட்டையின் நிறம் மாறியது
ஒரு கலாச்சாரம் பிறந்தது
எப்படியோ
சட்டை அவிழ்ந்து விழுந்தது
ஆடு பிறந்தது
Thursday, July 3, 2014
காற்று
பூந்தோட்டத்தின் வழியாக
வந்தக் காற்று
களைப்புற்றிருந்தது
ஒவ்வொரு பூவும்
ஒரு கவிதை சொல்லியிருக்கவேண்டும்
இல்லை
சொல்ல சொல்லியிருக்கவேண்டும்
பட படவென அடித்திருக்கும்
இலைகள்
பல கதைகள் சொல்லியிருக்கவேண்டும்
இல்லை
பல கேள்விகள் கேட்டிருக்க வேண்டும்
வண்ணத்துப் பூச்சிகளைப் பிடிக்கத்
துரத்தியிருக்க வேண்டும்
இல்லை
ஒவ்வொரு பூவின் மணத்தையும்
பிடித்திருக்கவேண்டும்
******
கடலை மொழிபெயர்த்துக்கொண்டிருந்த காற்று
மிகவும் களைப்புற்றிருந்தது..
எது கடல்?
அலைகளா?
அதன் ஓயாத சத்தமா?
ஆழமா?
அதன்
அதீத மெளனமா?
மீன்களா?
மீனவர்களா?
மழையா?
நீலமா?
நீளமா?
காற்று
மிகவும் களைப்புற்றிருந்தது..
வந்தக் காற்று
களைப்புற்றிருந்தது
ஒவ்வொரு பூவும்
ஒரு கவிதை சொல்லியிருக்கவேண்டும்
இல்லை
சொல்ல சொல்லியிருக்கவேண்டும்
பட படவென அடித்திருக்கும்
இலைகள்
பல கதைகள் சொல்லியிருக்கவேண்டும்
இல்லை
பல கேள்விகள் கேட்டிருக்க வேண்டும்
வண்ணத்துப் பூச்சிகளைப் பிடிக்கத்
துரத்தியிருக்க வேண்டும்
இல்லை
ஒவ்வொரு பூவின் மணத்தையும்
பிடித்திருக்கவேண்டும்
******
கடலை மொழிபெயர்த்துக்கொண்டிருந்த காற்று
மிகவும் களைப்புற்றிருந்தது..
எது கடல்?
அலைகளா?
அதன் ஓயாத சத்தமா?
ஆழமா?
அதன்
அதீத மெளனமா?
மீன்களா?
மீனவர்களா?
மழையா?
நீலமா?
நீளமா?
காற்று
மிகவும் களைப்புற்றிருந்தது..
Subscribe to:
Comments (Atom)