கண் முன்னே
நகர்கிறது காலம்
ஒரு வெண்மேகம்போல்
ஒரு
கண் சிமிட்டலில்
அதனைத் தொலைத்துவிட்டேன்
காதல் பறவை
அதன் திசையறிந்துவந்து சொன்னது
இப்பொழுது
கால்களுக்கடியில்
காலம்
உலகம் முழுதும்
ஒரே மொழிதான் பேசுகிறது
மழை
நீ
நனையாதிருக்கும் வரை…
மழைக்கால
மாலை நேரங்களில்
வெட்கப்படாதே
மின்மினிப் பூச்சிகளைப்
பெற்றெடுக்கின்றன
என் கண்கள்
அன்பே
முத்த அணை
கட்டி
தேக்கிடுவோம் வா
இம்மழை
மழையாகவே
நம்மைக் கடக்கட்டும்
No comments:
Post a Comment