உலகின்
எல்லா மொழிகளிலிருந்தும்
வண்ணம் எடுத்து
ஒரு ஓவியம் வரைகிறேன்
இந்த மழை
சிறு
தூறலில்
அதன் நிறம் மாற்றுகிறது
மழையைக் காணாமலே
வாழ்ந்து
போகும்
நட்சத்திரங்களின் சோகத்தை
எழுதி
கடலில் வீசுகிறேன்
கால் கட்டிக்கொண்டுக்
கதை சொல்லும்
மழலையாய்
மழை
புரிந்தும் புரியாமலும்
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
மழையும்
மலையும் பேசிக்கொண்ட
பூமியின் ரகசியத்தை
காட்டோடு போய்
கடலில்
சேர்க்கிறது
அருவியிடமிருந்து
நதி
கேட்டு, சொல்ல
மேல் வரும் மீன்களைக்
கொத்திக் கொண்டுப் போகின்றன
பறவைகள்
இப்படியாய்
ஒரு
ஆதி ரகசியம்
காக்கப்பட்டு வருகிறது
No comments:
Post a Comment