Sunday, August 17, 2014

தற்கொலைக் கவிதை

எனக்கு என் அப்பாவைப் பிடிக்காது - அவர் என்னிடம் எதிர்பார்ப்புகளுடனேயே இருக்கிறார்.
எனக்கு என் அம்மாவைப் பிடிக்காது - அவள் என்னிடம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இருக்கிறாள். எனக்கு என் தம்பியைப் பிடிக்காது - அவனுக்கு என்னை மிகவும் பிடிக்கும்.
எனக்கு என் நண்பர்களைப் பிடிக்காது - காரணம் தெரியவில்லை.
எனக்கு அவளைப் பிடிக்காது - ஏனென்றால்... ஏனென்றால்... ஏனென்றால்
எனக்கு என்னையும் பிடிக்காது -
அதனால்தான் சாகப் போகிறேன்.

No comments:

Post a Comment