Thursday, August 14, 2014

தற்கொலை…

குடை விரிக்காதே
இது
நாம் நனையும்
கடைசி மழை

இசையோ
மதுவோ
வேண்டாம்
மாலை
மங்கட்டும்

கடைசியாகப் பார்க்கலாம் வா
கருப்பு மலர்
பூக்கத் தொடங்குகிறது

மேக ஒட்டடைகள்
படிந்த‌
இந் நிலவை
நன்றாகப் பார்த்துக்கொள்

கருப்பின்
குழந்தைகள்
கரைகின்றன‌
நல்ல சகுனம்
நமக்கு

கடைசி முத்தங்களை
கடைசி நன்றிகளை
கடைசி மன்னிப்புகளை
கடைசி ஆசைகளை
கடைசிப் புன்னகையுடன்
குறிப்பெழுதி வை

அதோ
அதோ நமக்கான சமிக்ஞை
எவ்வளவு பிரமாண்டமாய்...
எவ்வளவு வெண்மையாய்...
எவ்வளவு மெதுவாய்..
கிழக்கில் வருகிறது

இல்லை

அந்த விஷத்தை எடு
சீக்கிரம் குடித்துவிடுவோம்

No comments:

Post a Comment