எழுதத் தொடங்கி
பின்
பாதியில் அழித்த
கவிதைகளிலிருந்து
ஒரு வார்த்தைத்
தப்பித்து
ஒரு பெருமரமாய்
இன்று வளர்ந்து
நிற்கிறது.
ஆசைகள்,
கோபங்கள்,
அனுதாபங்கள்,
தனிமை,
அச்சம்,
ஆற்றாமை,
இன்னும்
பலவும்
கிளைத்திருக்கின்றன.
எல்லா கிளைகளிலும்
பச்சை பசேலென
இலைகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பழங்கள்
அதில் தொங்கும்
பறவைகள்…
இன்று
பார்க்க
அழகாய்த்தான் உள்ளது
என் கடந்த காலம்
Monday, December 15, 2014
முத்தம் தரும் காகம்
தினமும் காலை
பத்து மணிக்கு
எங்கள் வீட்டுக்கு
ஒரு காகம் வரும்
ஒவ்வொரு நாளும்
எங்கிருந்தோ
ஒரு முத்தத்தைப்
பறித்து வரும்
ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு முத்தம்
தரும்
காக்கைத் தரும்
முத்தமென்பதால்
கழுவி
எடுத்து வைத்துக்கொள்வேன்
சோறு வைக்க மறந்த
ஒரு நாளில்
இரண்டு முத்தங்களைப்
போட்டுப் போயிருந்தது
மறுநாள்
அக்காக்கையைப் பின் தொடர்ந்து
சென்றேன்
மாய வனமொன்றில்
நுழைந்த
காக்கை
ஒரு பெண்ணாய் மாறியது
இதுவரை
இவ்வுலகம் பார்த்திராத
பேரழகி
எல்லோரிடமும்
காட்டி
பெருமைப்படத் துடித்தது மனம்
விரைந்து சென்று
எல்லோரையும்
அழைத்து வந்து
காட்டினேன்
யாருக்கும்
தெரியவில்லை
வீட்டிற்கு அழைத்துச் சென்று
முத்தங்களைக் காட்டினேன்
அவர்களுக்கு
எதுவும்
தெரியவில்லை
மீண்டும்
அவளிடம் ஓடிச்சென்று
“நான் உனக்கு சோறு வைப்பவன்
நீ எனக்குத் தினமும் முத்தம் தருவாய்” என்றேன்
அவள்
மாயமாய் மறைந்தாள்
அடுத்த நாள்
பத்து மணியாயிற்று
காக்கை வந்தது
ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு முத்தமும் தந்தது
இதுவா
அவள்?
ஏனோ
அன்றைய முத்தத்தையும்
கழுவியே
எடுத்துக்கொண்டேன்…

முத்தங்கள் மூன்று
அவள்
கடைசியாகத் தந்த
முத்தத்தைத்
தொலைத்துவிட்டுத்
தேடிக்கொண்டிருந்தேன்
நேற்று பெய்த மழை
தேடித் தந்தது
இன்று
தொலைப்பதற்கு
ஒரு முத்தமும்
தேடித்தர
ஒரு மழையும்
வேண்டும்..
#
எவ்வளவு ஆழத்தில்
விழுந்தாலும்
என்னை
மீட்டெடுக்கும்
இதழ்களைத் தொலைத்துவிட்டேன்
இப்பொழுது
நான் எங்கிருக்கிறேன்…!
#
நாம் முத்தமிட்டுக் கொள்ளும்பொழுதெல்லாம்
தனிமையைய உணர்வதில்லை யென
சொல்லிச் செல்கிறது
மழை!
எப்படி எழுதினாலும்…!
நீட்டியோ
சுருக்கியோ
எப்படி எழுதினாலும்
ஒரு வேசியைப் பற்றியக்
கவிதையில்
பல ஆண்களின்
வியர்வை நெடியே
அடிக்கிறது!
மரபோ
புதுக்கவிதையோ
எப்படி
எழுதினாலும்
போலிச் சாமியார்களைப் பற்றியக்
கவிதை யொன்றில்
ஏமாளிகளே பளிச்சிடுகிறார்கள்!
போர்களைப் பற்றி
எப்படி எழுதினாலும்
கவிதை
அர்த்தமற்றதாகவே வருகிறது
எப்படி எழுதினாலும்
ஒரு குடும்பத்தைப் பற்றியக்
கவிதையில்
குடும்பத் தலைவி
தலைப்பாக வருவதேயில்லை!
சாதிகளைப் பற்றி
எப்படி எழுதினாலும்
கவிதையில்
சில வார்த்தைகளுக்கான
இட ஒதுக்கீடு
அவசியமாகிறது!
எங்கிருந்து எழுதினாலும்
மதங்களைப் பற்றிய
ஒரு கவிதை
தொலைந்து போய்விடுகிறது!
ஒருவருக்கு ஒரு வரி
என்றாலும்
வன்புணரப்பட்டவர்களைப் பற்றிய
ஒரு கவிதை
முடிவதேயில்லை!
சுருக்கியோ
எப்படி எழுதினாலும்
ஒரு வேசியைப் பற்றியக்
கவிதையில்
பல ஆண்களின்
வியர்வை நெடியே
அடிக்கிறது!
மரபோ
புதுக்கவிதையோ
எப்படி
எழுதினாலும்
போலிச் சாமியார்களைப் பற்றியக்
கவிதை யொன்றில்
ஏமாளிகளே பளிச்சிடுகிறார்கள்!
போர்களைப் பற்றி
எப்படி எழுதினாலும்
கவிதை
அர்த்தமற்றதாகவே வருகிறது
எப்படி எழுதினாலும்
ஒரு குடும்பத்தைப் பற்றியக்
கவிதையில்
குடும்பத் தலைவி
தலைப்பாக வருவதேயில்லை!
சாதிகளைப் பற்றி
எப்படி எழுதினாலும்
கவிதையில்
சில வார்த்தைகளுக்கான
இட ஒதுக்கீடு
அவசியமாகிறது!
எங்கிருந்து எழுதினாலும்
மதங்களைப் பற்றிய
ஒரு கவிதை
தொலைந்து போய்விடுகிறது!
ஒருவருக்கு ஒரு வரி
என்றாலும்
வன்புணரப்பட்டவர்களைப் பற்றிய
ஒரு கவிதை
முடிவதேயில்லை!
வீடு
ஓடுகள் போய்
மாடிகள் ஆயிற்று
ஓர் வீடாய் இருந்ததைப்
பல அறைகளாய்ப் பிரித்தாயிற்று
ஜன்னல்கள் எல்லாவற்றிலும்
கண்ணாடிகள் பொருத்தியாயிற்று
துளசி மாடத்தைப்
படம் பிடித்து மாட்டியாயிற்று
விதவிதமான வண்ணங்கள்
அடித்தாயிற்று
கிரக பிரவேசத்திற்கு
எல்லோரும் வந்துவிட்டார்கள்
வாசலில்
முரண்டு பிடிக்கும்
இந்தப்
பசுவிற்கு மட்டும்
இடித்துக் கட்டப்பட்ட வீட்டை
ஆசிர்வதிப்பதில்
அவ்வளவு ஆர்வமில்லை போலும்..
–
Phillip Hughes
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம் கிரிக்கெட் உலகில் பெரிய
சோகத்தைத் தந்து கொண்டிருக்கும் சமீபத்திய நிகழ்வு. இப்படித்தான் சொல்ல
வேண்டியிருக்கிறது. காலம் சுற்றும் வேகம் பன் மடங்காகிவிட்ட நிலையில் ஒவ்வொரு
நிகழ்விற்கும், அது ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் ஆயுட்காலம் வெகு குறைவு. முன்னர்
ஒரு பதிவில் நாளையோ நாளை மறு நாளோ மறந்து விடப் போகிற ஒரு மரணத்திற்கு என் கண்ணீர்
அஞ்சலி என்று எழுதியிருந்தேன். இப்பொழுதும் அவ்வரிகளே நினைவிற்கு வருகின்றன.
பிலிப்பின் மரணம் மிகவும் துரதிருஷ்டவசாமனது. மிக இள வயதில் அவருக்கும் ஏற்பட்டிருக்கும் இம்முடிவு வேறு யாருக்கும் நிகழக்கூடாத ஒன்று. உலகின் பல பகுதி மக்களும் தங்களின் வருத்தங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவருக்காக இரண்டு நிமிடங்கள் ஒன்றாய் செலவு செய்கிறார்கள். இதைப் போன்ற துக்ககரமான நிகழ்வுகளிலெல்லாம் நான் கவனிப்பது, வியப்பது இது ஒன்றே. இந்த ஒற்றுமை, மனித்தன்மை ஏன் மற்ற நேரங்களில் அதிகம் வெளிப்படுவதில்லை. ஏன் ஒரு பெருந்துயரில் ஒன்று சேரும் நாம் மற்ற நேரங்களில் சேருவதில்லை. ” நல்ல விசயத்துல கூட இருக்கறமோ இல்லையோ கஷ்டக் காலத்துல இருக்கனும்” என்று ஏன் சொல்லி வளர்க்கிறார்கள். இப்படி ஒன்று சேர ஒரு இழப்பு ஏற்படத்தான் வேண்டுமா?
ஒரு மரணம்
எத்தனைப் பேரை
அழ வைக்கிறது
ஒரு மரணம்
எத்தனைப் பேரை
ஒன்றாகச் சேர்க்கிறது
ஒரு மரணம்
எத்தனைப் பேரின்
நேரத்தை
தன் பக்கம் இழுக்கிறது
ஒரு மரணம்
எத்தனை நாடுகளின்
தலைப்புச் செய்தியாகிறது
ஒரு மரணந்தான்
எத்தனை அனுதாபங்களை
எத்தனை இரங்கல் செய்திகளைச்
சம்பாதிக்கிறது
இதுபோல்
ஒவ்வொரு மரணமும் நிகழ்ந்தால்?
ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னும் நிகழ்ந்தால்?
யாரும் பிரியாத
ஒரு மரணம் வேண்டும்
எதுவும் நிகழாத
மரணம் தினம் வேண்டும்
இம் மானிடர்
ஒன்றாய்ச் சேர
இம் மானிடர்
மானிடராய் வாழ
யாரும் சாகாத
நாள்
தினமும் வர வேண்டும்!!

ஒரு ரகசியம்..
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
கடலில் கொட்டினேன்
இப்பொழுது
இந்தக் கடலை
என்ன செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
மழையில் எறிந்தேன்
இப்பொழுது
இந்த மழையை
எப்படி போகச் செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம் அள்ளி
நெருப்பில் கொட்டினேன்
இனி
எப்படி
அதை
சுடச் செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
பறக்க விட்டேன்
விரட்டிச் செல்லும்
காற்றை
இனி
எப்படி
வீசச் செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
சேர்த்து
ஒரு ரகசியம் செய்தேன்
இப்பொழுது
அதை ரகசியமாய்
உன்னிடம்
எப்படி சேர்ப்பது
–
காதலையெல்லாம்
கடலில் கொட்டினேன்
இப்பொழுது
இந்தக் கடலை
என்ன செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
மழையில் எறிந்தேன்
இப்பொழுது
இந்த மழையை
எப்படி போகச் செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம் அள்ளி
நெருப்பில் கொட்டினேன்
இனி
எப்படி
அதை
சுடச் செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
பறக்க விட்டேன்
விரட்டிச் செல்லும்
காற்றை
இனி
எப்படி
வீசச் செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
சேர்த்து
ஒரு ரகசியம் செய்தேன்
இப்பொழுது
அதை ரகசியமாய்
உன்னிடம்
எப்படி சேர்ப்பது
–
நம்பிக்கையில்…
நாம் பிரியும் போதல்லாம்
குடுத்துக்கொள்ளும்
ஒற்றை முத்தத்தை
உன்னைப் பிரிந்த இடத்தில்
வைத்து விட்டு வந்திருக்கிறேன்
நீ
அங்கு வந்து சேர்வாய்
என்ற நம்பிக்கையில்…
மேதகு குடிகாரர்கள் பேச்சு விடிஞ்சா போச்சு
இப்பொழுதெல்லாம் குடிகாரர்கள் என்று தனியாக யாரும் இல்லையென்பதால் ஒருமையில்
எல்லாம் அழைத்தால் அடிதான் விழும். சமீபமாக, இரட்டை நிலைப்பாடு அல்லது வெவ்வேறு
இடங்களில் வெவ்வேறு நிலைப்பாடு, இடத்திற்கு தகுந்தாற்போல் கொள்ளும் நிலைப்பாடு உடைய
மனிதர்களைப் பற்றி அடிக்கடி கேட்கிறேன் அல்லது பார்க்கிறேன்.
‘மாத்தி மாத்தி பேசுறான் பாருடா பச்சோந்தி’ என்று பொதுவாக இவர்களை வசைப்பாடுவோம். சற்று யோசித்தால் ஒரே மாதிரி மன நிலையுடந்தான் ஒருவரால் அவர் வாழ் நாளெல்லாம் இருந்துவிட முடியுமா? அப்படி யாரேனும் இதற்கு முன்னர் இருந்துள்ளார்களா? போதி மரத்திற்கு முன் சித்தார்த்தன், பின் புத்தன், இல்லையா? திருடன் வால்மிகி ஆகிறார். காமுகன் அருணகிரி நாதர் ஆகிறார். இவர்களெல்லாம் இருவேறு நிலைப்பாடுடையவர்களாக வாழ்ந்து முடித்தவர்கள்தானே. இது தவறென்று சொல்ல முடியுமா? இயலாது. இவர்கள் ஒரே நேரத்தில் இரு விதமாக இருந்தவர்கள் இல்லை. ஒரு நேரத்திற்குப் பின் ஒரு நிலைப்பாடு எடுத்தவர்கள். சரி. இன்னொரு எடுத்துக்காட்டுப் பார்க்கலாம். ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்தது. ஒரு ஊரில் இருந்த மக்கள் எல்லோரும்/ பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாறுகின்றனர். மாற வேண்டிய சமூகச் சூழல். இதில் குறிப்பிடத் தகுந்த விசயம் என்னவென்றால் மதம் மாறிய யாரும் அவர்கள் குடும்ப உறிப்பினர்களைக் கட்டாயப் படுத்தவில்லை. விரும்பாதவர்களை அவர்கள் மதத்திலியே இருக்க அனுமதிக்கிறார்கள். அடுத்த தலைமுறை வருகிறது. அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய நேரம் வரும்பொழுது ஒரே குடும்பத்தில் இருவேறு மதங்கள் இருப்பது பிரச்சனை ஆகிறது. அப்பொழுது ஒரு குடும்பத்தலைவர் தன் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களின் மதத்திற்கே திரும்புகிறார். இக்காரியத்தை மத அடிப்படைவாதிகள் தவிர யாரேனும் தவறென்று கூறுவார்களா?
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மாதிரி இருப்பது தவறு போல் தோன்றினாலும் அனேகமாக நாம் எல்லோருமே அவ்வாறுதான் இருக்கிறோம். நம்மில் எத்தனைப் பேர் நம் அலுவலக மேலதிகாரர்களை ஒரே மாதிரியான மரியாதையுடன் அழைக்கிறோம். எத்தனைப் பேர் நேரில் பார்க்கும் பொழுது வயதில் மூத்தவரை அண்ணா என்று அழைத்துவிட்டு அவர் தலை மறைவில் ஒருமையில் ஆரம்பிக்கிறோம். ஆக எதுதான் சரி? எதுதான் தவறு?
வாழ்க்கை போராட்டமாகி விட்ட காலங்களில் சரிக்கும் தவறிர்க்கும் அதிக வித்யாசமில்லை.இருப்பினும் ஏட்டில் ஒரு விதி எழுதுவதற்காக: இதுதான் சரி, இது தவறு, என்பதற்காகப் பார்த்தால் ஒருவர் தன் வாழ்க்கை விழுமியங்களை மறந்து அல்லது அப்படி ஒன்றே இல்லாமல் வாழ்ந்தால் அது தவறெனக் கொள்ளலாம். குடிகாரர்கள் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கையின்பால் கூறும் வாக்கியம். அவர்கள் நிச்சயம் காலையில் மாறிவிடுவார்கள் என்பது இங்கு நம்பிக்கை. அலுவலக மேலதிகார்களை மரியாதையின்றி அழைத்தாலும் அங்கு நம்பிக்கைக்கு எந்த குறையுமில்லை. ஆக ஒருவர் தன் மேலுள்ள நம்பிக்கையை இழக்கும் வண்ணம் மாறுவாராயின்/ மாறிக்கொண்டே இருப்பாராயின் அது தவறாகிறது. மற்றபடி எனக்கு “சொல்லும் ஒன்றுதான், செயலும் ஒன்றுதான்” என்று கூறுவதல்லாம் என்னளவில் இன்னொரு பஞ்ச் டயலாக் மட்டுமே.

இனி ஒரு விதி செய்வோம்
நம் நாட்டில் எழுத்தப்பட்ட சட்டங்களை விட, எழுதப்படாத சட்டங்களே நாட்டை
ஆள்கின்றன என்று நீதிபதி ஒருவர் சொன்னதாகப் படித்தது நியாபகம் வருகிறது. எழுதப்படாத
சட்டங்களுக்கு கலாச்சாரம், பண்பாடு என்று பெயர் இருக்கலாம். கலாச்சாரம் பற்றி
பேசுவது எறும்புப் புற்றுக்குள் கையை விடுவது போன்றது. நிமிடத்திற்குள் கை
முழுவதும் ஆயிரம் எறும்புகள் அப்பியிருக்கும்.
கலாச்சாரம், பண்பாடு என்ற சொற்களுக்கு அர்த்தம், விளக்கம், ” நாம பசி அடங்கி
சாப்படற இட்லி அடுத்தவங்களோடது” என்ற ரீதியில் தருவது ஆபத்தானது. அத்தகைய ஒற்றை வரி
அர்த்தங்களைக் கற்றதனால்தான் இன்று பலக் கலாச்சாரப் பிரச்சனைகள் வருகின்றன. மனித
இனம் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்து இச் சொற்களுக்கான அர்த்தம்
எடுக்கப்பட வேண்டும்.
என் புரிதல்: ஒன்றாக வாழத் தொடங்கிய ஒரு குழுவின் வாழ்க்கை முறை, அவை
சார்ந்தவைகள், நம்பிக்கைகள், இவற்றிலிருந்த பொதுவானவையின் தொகுப்பே
கலாச்சாரமாகிறது. பின் அடுத்த தலைமுறைகளை அவை வழி நடத்துகின்றன. இவ்வாறு
கூறும்பொழுதே ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பண்பாடு இருக்கும் என்பது புரியும்.
அமெரிக்காவில் ஒரு செயல் சரியென பார்க்கப்படுவதும், இந்தியாவில் தவறென அதே செயல்
பார்க்கப்படுவதும் அதனால்தான்.
பண்பாட்டின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் மறுக்கப்படும் தனிமனித
உரிமைகளைப் பற்றி பேசவே இதை எழுதத் தொடங்கினேன். தனி மனித உரிமை என்றால் என்ன.
அடுத்தவர் மூக்கைத் தொடத வரை என் சுதந்திரம் உள்ளது என்ற சுதந்திரத்திற்கான
அர்த்தத்தைப் பொறுத்திப் பார்க்கலாம் .ஆனால் நடைமுறையில் இந்த விளக்கம்
அர்த்தமற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
எல்லாவற்றையும் சரி அல்லது தவறு என்று பார்ப்பதின் விளைவாக எழுகிறது பிரச்சனை.
அதிலும் இது சரி, இது தவறு என்று நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை
வைத்துக்கொண்டு இவற்றைச் செய்வதுதான் மிகப்பெரியப் பிரச்சனை. இவை வீட்டிலேயே
தொடங்கி விடுகிறது. சரிக்கும், தவறிர்க்குமான வித்யாசங்களை உணரச் செய்வதற்குப்
பதில் குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கிறோம். அத்தகையக் கற்பிதங்கள் எல்லா இடங்களிலும்
பொருத்திப் பார்க்கப்படுகின்றன. பகல் என்றால் வெளிச்சம், இரவென்றால் வெளிச்சமின்னை
என்று சொல்லும்பொழுதே இங்கு பகலென்றால் இன்னொரு இடத்தில் இரவு, இங்கு இரவென்றால்
இன்னொரு இடத்தில் அதுவே பகல் என்று சொன்னோமேயானால் எல்லோரும் ஒன்றாக மேற்கொள்ளும்
பயணமல்ல வாழ்க்கை என்று புரியவரும்.
வாழ்க்கை. எங்கிருந்து வருகிறோம் எங்கு போகிறோம் என்பதே நம்பிக்கைகளின்
அடிப்படையில்தான் விளக்கப்படும்பொழுது நம் நம்பிக்கைகளின் பெயரால் மற்றவரின்
வாழ்க்கையில் குறுக்கிடுவது அறிவார்ந்த செயலாகாது.
தனிமனித உரிமை என்று சொல்லிக்கொண்டு எதைவேண்டுமானாலும் செய்யலாமா என்று
கேட்பது தனி விவாதம். தனிமனித உரிமை என்ற ஒன்று இருக்கிறது என்பதே இங்கு பலருக்குத்
தெரியாத நிலையில், முதலில் அடிப்படைகளைச் சரி செய்து கொள்வோம்.
நம் வாழ்க்கையை மட்டும் நாம் வாழவேண்டுமென்று இனி ஒரு விதி
செய்வொம்.
Subscribe to:
Comments (Atom)