Monday, May 25, 2015

    நைட் ஷிப்ட் :-
    அள்ளி அள்ளி
    பூசிக்கொண்ட‌
    அன்றைய வெயில் போலில்லை...
    இன்றைய வெயில்
    புகுந்த வீட்டிற்குப் போன
    பெண் போலுணர்கிறேன்
    இனி
    திரும்ப‌
    வழியில்லை
    வெயிலிடம்
    வெயிலில்லா வெயில்தான்
    இன்றைய இரவுகள்
    எனினும்
    இவை
    வெயிலில்லையே…
    ஒளிச்சாரல் அடிக்காத‌
    வீட்டின் கூரையில்
    தொங்கிக்கொண்டுப் பார்க்கிறேன்
    ஒரு பெரிய குடை
    விரியும் வரை
    காத்திருக்கிறேன்
    வாலில்லை
    எனவே நான்
    எலியில்லை
    வவ்வாலும் ஆந்தையுந்தானில்லை
    நான் வாழுமிடம்
    காடில்லை
    போவது
    வேட்டைக்குமில்லை
    யாரேனும்
    பகலினில் வாங்கி
    இரவினில் குடுங்கள்
    எங்களுக்கென‌
    ஒரு சுதந்திரம்
    எங்களுக்கும் சுதந்திரம்!

No comments:

Post a Comment