இன்னும் சற்று நேரத்தில்
முடியப் போகிற
இந்நாளுக்கு
ஒரே படபடப்பு..
பரிதவிப்பு..
உயிலின் ரகசியத்தை
சொல்லத் துடிக்கும்
மரணத்தின் விளிம்பில்
நிற்கும் கிழவனின்
பரிதவிப்பு..
அதற்கு
இன்றைக்கான கவிதையைத்
தராமலே போகும்
குற்றவுணர்வு
மறுதலிப்புகள் ஏதுமின்றி
போட்டதைப் பெற்றுச்செல்லும்
பிச்சைக்காரனாய் நான்
எவ்வளவு முயன்றும்
காப்பாற்ற முடியாத நோயாளியாய்
சாகிறது
இந்நாள்
Thursday, June 26, 2014
Wednesday, June 25, 2014
கப்பல் கவிதை
ஒரு காகிதத்தைக் கொடுத்து
ஒரு நல்ல கவிதை எழுதென்றார்கள்
எது நல்ல கவிதை?
யென்றேன்
"நீ சொல்லாமல் சொல்லியிருக்கவேண்டும்
நீ சொல்லாததும் அதிலிருக்கவேண்டும்
கவிதை
நில்லாமல்
ஓட வேண்டும்
வானம் போல்
இல்லாத ஒன்றுக்கும் நிறம் தர வேண்டும்
வார்த்தை ஒவ்வொன்றும்
எழுந்து நிற்க வேண்டும்
காதல் இருக்கவேண்டும்
காமம் இருக்கவேண்டும்
களப் போராளியின்
வீரமுமிருக்க வேண்டும்
நீ இருக்க வேண்டும்
குறிப்பாக
நானுமிருக்க வேண்டும்"
எனக்கவர்கள் வேண்டுதல்கள் புரிந்தது
காகிதத்தை
மடித்து
மடித்து
.
.
.
.
.
மடித்து
பிரித்து
சேர்த்து
விரித்து
கொடுத்தேன்
தலைப்புக் கேட்டார்கள்
'கப்பல்' என்றேன்
ஒரு நல்ல கவிதை எழுதென்றார்கள்
எது நல்ல கவிதை?
யென்றேன்
"நீ சொல்லாமல் சொல்லியிருக்கவேண்டும்
நீ சொல்லாததும் அதிலிருக்கவேண்டும்
கவிதை
நில்லாமல்
ஓட வேண்டும்
வானம் போல்
இல்லாத ஒன்றுக்கும் நிறம் தர வேண்டும்
வார்த்தை ஒவ்வொன்றும்
எழுந்து நிற்க வேண்டும்
காதல் இருக்கவேண்டும்
காமம் இருக்கவேண்டும்
களப் போராளியின்
வீரமுமிருக்க வேண்டும்
நீ இருக்க வேண்டும்
குறிப்பாக
நானுமிருக்க வேண்டும்"
எனக்கவர்கள் வேண்டுதல்கள் புரிந்தது
காகிதத்தை
மடித்து
மடித்து
.
.
.
.
.
மடித்து
பிரித்து
சேர்த்து
விரித்து
கொடுத்தேன்
தலைப்புக் கேட்டார்கள்
'கப்பல்' என்றேன்
Tuesday, June 24, 2014
உங்களுக்காக…
நண்பர்களே,
என் கவிதைகளில்
காற் புள்ளியையோ
முற்றுப் புள்ளியையோ
வார்த்தைகளையோ
அர்த்தங்களையோ
ஏன்
ஒரு கவிதையையோ
ஏதோ
ஒன்றை
எப்பொழுதும்
விட்டு வைக்கிறேன்
உங்களுக்காக…
என் கவிதைகளில்
காற் புள்ளியையோ
முற்றுப் புள்ளியையோ
வார்த்தைகளையோ
அர்த்தங்களையோ
ஏன்
ஒரு கவிதையையோ
ஏதோ
ஒன்றை
எப்பொழுதும்
விட்டு வைக்கிறேன்
உங்களுக்காக…
விடியாதே இரவே..
” நாளைக்கு”
அழையா விருந்தாளியாய் போகிறேன்
ஒவ்வொரு நாளும்…
********************
எந்த மொழியில்
எப்படி சொன்னால்
“நாளை”
வருவதை
நிறுத்தும்…
********************
“இன்று”
என்னைக் கொன்றுகொண்டிருக்கிறது
நாளை
எப்படியும் செத்துவிடுவோமென்ற நம்பிக்கையில்
நானும் செத்துக்கொண்டிருக்கிறேன்…
********************
முதுகில் குத்திப் போகிறது
“இன்று”
மார்பில் குத்தி
இழுக்கிறது
“நாளை”
புரூட்டஸ் “நேற்றோ”
கொல்லாமல்
கொல்கிறது

Monday, June 23, 2014
தனிமை
உனக்காகவே வாழ்கிறேன்
என்று சொல்பவர்கள்
உண்மையும் சொல்லலாம்
பொய்யும் சொல்லலாம்…
உன்னோடு மட்டுமே என் வாழ்வு
என்று சொல்பவர்கள்
பொய் சொல்லலாம்…
உனக்காகவே காத்திருக்கிறேன்
என்று சொல்பவர்கள்
உண்மை சொல்லலாம்…
நீயின்றி நானில்லை
என்று சொல்பவர்கள்
உண்மையும் சொல்லலாம்
பொய்யும் சொல்லலாம்…
நீங்கள் என்னிடம்
உண்மையும் சொல்லலாம்
பொய்யும் சொல்லலாம்…
யாரேனும்
ஏதேனும்
சொல்லுங்கள்…
என்று சொல்பவர்கள்
உண்மையும் சொல்லலாம்
பொய்யும் சொல்லலாம்…
உன்னோடு மட்டுமே என் வாழ்வு
என்று சொல்பவர்கள்
பொய் சொல்லலாம்…
உனக்காகவே காத்திருக்கிறேன்
என்று சொல்பவர்கள்
உண்மை சொல்லலாம்…
நீயின்றி நானில்லை
என்று சொல்பவர்கள்
உண்மையும் சொல்லலாம்
பொய்யும் சொல்லலாம்…
நீங்கள் என்னிடம்
உண்மையும் சொல்லலாம்
பொய்யும் சொல்லலாம்…
யாரேனும்
ஏதேனும்
சொல்லுங்கள்…
Sunday, June 22, 2014
“பிணத்திடம் வேறு என்ன பதில் இருக்கும்…”
(இந்தக் கதையில் வரும் கதை சொல்லியின் சில கருத்துக்கள் யார் மனதையும் புன்படுத்துவதற்கல்ல. சரி, தவறு எல்லாம் நிறைந்ததுதான் வாழ்க்கை. முரண் பட்ட கருத்துக்கள் கதை சொல்லி சொன்னான் என்றால் அது அவன் தனிப்பட்ட அபிப்பிராயம் என்றே எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி)
செல்பேசியில் ஒன்பது மணி ஆயிற்று என்று அலாரம் அடித்தது. அரை மணி நேரம் எதைப் பற்றியும் சிந்திக்கக்கூடாது என்று அலாரம் செட் செய்துவிட்டு நடக்கத் தொடங்கினேன். அதுபோல் எதைப் பற்றியும் சிந்திக்காமல்தான் நடந்தேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு வேறு எதுவும் நினைவிலில்லை. அரை மணி நேரம் முடிந்துவிட்டது என்று மூளைக்கு புரிந்தவுடன் தேக்கி வைத்திருந்த அணை நீரைத் திறந்துவிட்டது போல் என் நினைவுகளைத் திறந்துவிட்டு விட்டது. கால்கள் அதற்கு மேல் நடக்க முடியாது, வீட்டிற்கு திருப்பு என்னை என்று கட்டளை இடுவது போல் இருந்தது. இப்பொழுது எனக்கு உடனே வீட்டிற்கு போக வேண்டும். வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஓடத் தொடங்கினேன். வரும் பொழுது எதை எல்லாம் கவனித்தேனோ அதையெல்லாம் திரும்பும்பொழுதும் கவனித்தேன். ஆனால் நினைவில் தான் எதுவுமில்லை. ஏதேதோ எண்ணங்கள்….
நேராக என் அறைக்குச் சென்று டியூப் லைட்டைப் போட்டு, விரித்தே கிடந்த பாயில் விழுந்தேன். மூச்சு திணறுவது போல் இருந்தது. அப்படியே சற்று நேரம் போயிற்று. எழுந்து பீரோவில் இருக்கும் ஆள் உயரக் கண்ணாடி முன் நின்றேன். மொத்த மன பாரத்தையும் ஒரு சொட்டு கண்ணீராய் வைத்திருந்தது வலக் கண். அதற்கு மேல் வெளிச்சம் பிடிக்கவில்லை. வெளிச்சம் என் தனிமையை எனக்கு சொல்லிக்கொண்டே இருந்தது. லைட்டை அனைத்துவிட்டு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினேன். மெழுகுவர்த்தி மனதில் மேலும் பல நினைவுகளை ஏற்றிவிட்டது. கடுப்பில் மெழுகுவர்த்தியை அனைத்துவிட்டு மீண்டும் பாயில் விழுந்தேன். மெழுகுவர்த்தி புகை சற்று நேரம் சுற்றி சுற்றி வந்துதது. பிறகு அதுவும் என்னை விட்டு எங்கோ போய்விட்டது.
*****
மூன்று மணி நேரத்திற்கு முன்பு:
அவளை எப்பொழுதும் சந்திக்கும் இடத்தில் சந்தித்தேன். ராஜி. என் காதலி. மூன்று மணி நேரத்திற்கு முன்பு வரை. எப்பொழுதும் போல் தான் இந்த நாளும் விடிந்தது. ஆனால் எப்பொழுதும் போல் முடியவில்லை. ராஜி வந்ததிலிருந்து அரை மணி நேரம் எதுவுமே பேசாமல் இருந்தாள்.(இப்பொழுது புரிகிறது நான் ஏன் அரை மணி நேரம் டைம் செட் பண்ணிக்கொண்டு நடந்தேன் என்று) பிறகு இனி உனக்கும் எனக்கும் எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். ஏன் எதற்கு என்று எதுவுமே சொல்லவில்லை. இரண்டு மணி நேரம் அங்கேயே திக்பிரமைப் பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தேன். பின்பு வீட்டை நோக்கி நடக்கலானேன், எதிரில் வருபவர்களிடம் வழிக் கேட்டுக்கொண்டே. கடைசியாக ஒருவர் வழி சொல்லிவிட்டு, வீட்டிலியே விடுவதாக சொல்லிவிட்டு, வீட்டிலும் வந்து விட்டார். போகும் பொழுது ” டேய், ஆனாலும் ஒவரா தாண்டா ஆக்டு குடுக்குற” என்று சொல்லிவிட்டு போனார். என் நண்பர்களில் ஒருவராகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டென்.
*****
எவ்வளவு நேரம் விழித்திருந்தேன் என்று தெரியவில்லை. எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. கனவு: ஆழ்துளாய்க் கிணற்றில் விழுந்து விடுகிறேன். மூச்சு விட இயலவில்லை. கண் திறக்க இயலவில்லை. முழுவதுமாய் கீழே விழுந்திருந்தாலேனும் உயிர் பிரிந்திருக்கும். பாதியில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு நேரம் இங்கிருப்பேன் என்று தெரியாது. நான் இங்கிருப்பேன் என்று யாருக்கும் தெரியாது. எப்படிச் சொல்வது. இந்தக் கிணறு இங்கு எப்படி வந்ததென்றே தெரியாதென்று……
“கடவுள் எங்கிருக்கிறார் என்று கேட்கும் பொழுதெல்லாம் மேலே என்று ஆகாயத்தைக் காட்டுபவர்க ளைப் பார்த்து சிரித்திருக்கிறேன். கடவுள் என்னைத் தாங்குபவர். என் சுக, துக்கங்களைத் தாங்குபவர். என் சரி, தவறுகளைத் தாங்குபவர். அவருக்குள் எனக்கு இடமளித்துள்ளார். என்றால் கடவுள் இந்த மண்ணில் அல்லவா இருக்க வேண்டும், என்று வாதிடுவேன். ஆனால் இப்பொழுது அவர்கள் கூரியதுதான் சரியோ!”
தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன். மூச்சு திணறியது உண்மைதான். ஆனால் துரதிருஷ்டவசமாக என் அறையில் இருந்தேன். கிராண்ட் கேன்யானில் முடமாக தனித்திருப்பதற்கு ஆழ் துளாய்க் கிணற்றிலியே இருக்கலாம். சாவு அருகில் இருப்பது தனிமையின் துயரைத் தாங்கும் கடைசி உந்துதலைத் தரும். எனக்கு அந்த அறை முழுவதும் நூறு யானைகளின் கருவிழிகளால் மட்டும் நிரம்பியிருப்பது போல் தோன்றியது. காதலி என்னை விட்டு பிரிந்து விட்டாள். என்னை விட்டு பிரிந்து விட்டாள்.யாரிடம் சொல்வேன். யாரிடம் சொன்னால் ஏன் என்னை விட்டு போனாள் என்று சொல்வார்கள். யாரிடம் சொன்னால் இனி நான் என்ன செய்வது என்று சொல்வார்கள். இல்லை யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால்,” போறா,விடு.. ஒன்னு போனா இன்னொன்னு..” என்று உளறுவார்கள். செருப்பால் அடிக்க வேண்டும். உயிர் ஒன்று போனால் போனது தான். மீண்டும் மீண்டும் முளைப்பதற்கு அது மயிறில்லை.என்னை யாராலும் இந்தக் குழியிலிருந்து மேலே தூக்க முடியாது.
ஒரு முறை என் தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “Love is not life. Even after you lose everything you had in your life,one thing would be left with you and that is Life” என்றேன். “ Yes, but remember onething love is what makes your life complete” என்றார். உண்மை தான். Now i feel incomplete.
” என் உயிர் என்னை விட்டு போய் விட்டது என்றேன்..
என்னைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்
என்னிடம் வந்து சிலர் பேசினார்கள்
சிலர் திட்டினர்கள்
சிலர் ‘திருத்தினார்கள்’
சிலர், எனக்கு ஏதோ புரியவைக்க முயற்சிக்கிறேன் என்றார்கள்
என் தாய் தந்தை அழுது புலம்பினர்
எல்லோரும் என்னிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டனர்
எல்லாவற்றிர்க்கும் மெளனமாகவே இருந்தேன்
பிணத்திடம் வேறு என்ன பதில் இருக்கும்…”
மீண்டும் தூங்கிப் போனேன். எப்படி தூக்கம் வருகிறது என்று கேட்கிறீர்களா?. அதுவும் தெரியவில்லை. எனக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் புரியவில்லை.
*****
காலத்திற்கு எந்த கருணையும் யார் மீதும் இருப்பதில்லை. உடைகளை மாற்றிக் கொண்டு அதன் வேலைக்கு எப்பொழுதும் வந்து விடுகிறது. என் மொத்த எடையயும் இதயம் சுமப்பது போல் எனக்கும் மறு நாள் விடிந்தது

Wednesday, June 18, 2014
காக்கா சுட்ட வடை
மின் கம்பம் ஒன்றில்
ஒரு காகம்
ஒரு வடையுன் நின்றிருந்தது
இல்லை உட்காந்திருந்தது
அதுவுமில்லை..
தெரியவில்லை..
கீழே ஒரு நாய்
நின்றிருந்தது
ஆம்
அது நரி இல்லை
காகத்திடம் வடையைப்
பெற்று செல்லவே
நாய் நின்றிருந்தது
ஆம்
அது நரி போலில்லை
கண் சுழல
கதை சொல்லத் தொடங்கியது
காகம்
இது
கதையல்ல
நிஜம்
ஆம் நாயே
நான் ஒரு பாட்டியிடம் தான்
இந்த வடையைச் சுட்டேன்
பாக்கெட் செய்யப்படவில்லையல்லவா
பாட்டி மரத்தடியில் தான்
வடை சுட்டாள்
ஆம் நாயே
அங்கு மரம் இருந்தது
மரம் என்றால் மரங்கள்
மரங்கள் என்றால் பறவைகள்
பறவைகள் என்றால் பூக்கள்
பூக்கள் என்றால் வசந்தம்
வசந்தம் என்றால் மழை
மழை என்றால் மாதம் மும்மாரி
தண்ணீர்
ஆற்று நீர்
ஊற்று நீர்
ஆஹா.. ஆஹா…
வாய் பிளந்த காகத்தின்
வடைக் கீழே விழுந்தது
மட நாய்க்கு
ஒரு கேள்வி முளைத்தது
“காக்கையே
எல்லாம் இருந்த இடத்திலும்
ஏன் நீ திருடி வந்தாய்”
ஆம் நாயே
ஏனென்றால்
அங்கு எல்லாமும் இருந்தது
காக்கை திருடும்
கள்ள நரி
சூது செய்யும்
புலி கொல்லும்
புரவிகளோடும்
பகலினில் சூரியன்
இரவினில் நிலவு
காலையில் வெளி போகும்
எல்லா உயிரும்
மாலை
வீடு திரும்பும்
அஃதே உலகம்
அதுவே வாழ்க்கை
என்று நாய்க்குரைத்துவிட்டு
காகம் பறந்து போனது
நாயும்
அவ்விடம் தேடி
ஓடிப் போனது
ஒரு காகம்
ஒரு வடையுன் நின்றிருந்தது
இல்லை உட்காந்திருந்தது
அதுவுமில்லை..
தெரியவில்லை..
கீழே ஒரு நாய்
நின்றிருந்தது
ஆம்
அது நரி இல்லை
காகத்திடம் வடையைப்
பெற்று செல்லவே
நாய் நின்றிருந்தது
ஆம்
அது நரி போலில்லை
கண் சுழல
கதை சொல்லத் தொடங்கியது
காகம்
இது
கதையல்ல
நிஜம்
ஆம் நாயே
நான் ஒரு பாட்டியிடம் தான்
இந்த வடையைச் சுட்டேன்
பாக்கெட் செய்யப்படவில்லையல்லவா
பாட்டி மரத்தடியில் தான்
வடை சுட்டாள்
ஆம் நாயே
அங்கு மரம் இருந்தது
மரம் என்றால் மரங்கள்
மரங்கள் என்றால் பறவைகள்
பறவைகள் என்றால் பூக்கள்
பூக்கள் என்றால் வசந்தம்
வசந்தம் என்றால் மழை
மழை என்றால் மாதம் மும்மாரி
தண்ணீர்
ஆற்று நீர்
ஊற்று நீர்
ஆஹா.. ஆஹா…
வாய் பிளந்த காகத்தின்
வடைக் கீழே விழுந்தது
மட நாய்க்கு
ஒரு கேள்வி முளைத்தது
“காக்கையே
எல்லாம் இருந்த இடத்திலும்
ஏன் நீ திருடி வந்தாய்”
ஆம் நாயே
ஏனென்றால்
அங்கு எல்லாமும் இருந்தது
காக்கை திருடும்
கள்ள நரி
சூது செய்யும்
புலி கொல்லும்
புரவிகளோடும்
பகலினில் சூரியன்
இரவினில் நிலவு
காலையில் வெளி போகும்
எல்லா உயிரும்
மாலை
வீடு திரும்பும்
அஃதே உலகம்
அதுவே வாழ்க்கை
என்று நாய்க்குரைத்துவிட்டு
காகம் பறந்து போனது
நாயும்
அவ்விடம் தேடி
ஓடிப் போனது
பூ
ஒரு
பூவின் பயணம்
பார்க்கப்படுவதில் தொடங்கி
பறிக்கப்படுவதில் முடிவடைகிறது
மற்றபடி
கல்லறையோ
கருவரையோ
அதற்கெல்லாம் ஒன்றுதான்
பூவின் பயணம்
பார்க்கப்படுவதில் தொடங்கி
பறிக்கப்படுவதில் முடிவடைகிறது
மற்றபடி
கல்லறையோ
கருவரையோ
அதற்கெல்லாம் ஒன்றுதான்
Friday, June 13, 2014
ஒரு முட்டாளின் கவிதை
பாரதியும் புதுமைப்பித்தனும்
ஷெல்லியும்
இன்றும் அப்படியே இருக்கிறார்கள்
நாமும் சீக்கிரம்
செத்து விட வேண்டும்
தப்பான நிறத்தில்
வருகிறது
கண்ணீர்
துக்கதின் நிறம்
கருப்பன்றோ!
வீட்டிற்கு வீடு
மரம் வளர்க்காதீர்கள்
மயில் வளருங்கள்
மயில் ஆடும்பொழுதுதான்
மழை வருகிறது
ஒரு கழுகின் காலில்
கவிதையைக் கட்டிவிடுங்கள்
பின்
என் கவிதை
மேலே மேலே மேல
போகிறதென்று கத்துங்கள்
ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்
ழளலழளலழழழழ
என்றெழுதுங்கள்
யாரேனும்
அர்த்தம் கேட்டால்
விட்டத்தைப் பார்த்து சிரியுங்கள்
ஷெல்லியும்
இன்றும் அப்படியே இருக்கிறார்கள்
நாமும் சீக்கிரம்
செத்து விட வேண்டும்
தப்பான நிறத்தில்
வருகிறது
கண்ணீர்
துக்கதின் நிறம்
கருப்பன்றோ!
வீட்டிற்கு வீடு
மரம் வளர்க்காதீர்கள்
மயில் வளருங்கள்
மயில் ஆடும்பொழுதுதான்
மழை வருகிறது
ஒரு கழுகின் காலில்
கவிதையைக் கட்டிவிடுங்கள்
பின்
என் கவிதை
மேலே மேலே மேல
போகிறதென்று கத்துங்கள்
ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்
ழளலழளலழழழழ
என்றெழுதுங்கள்
யாரேனும்
அர்த்தம் கேட்டால்
விட்டத்தைப் பார்த்து சிரியுங்கள்
Wednesday, June 11, 2014
“…ல்லை”
மீதமிருக்கும்
கடைசி மரத்தின்
உச்சியில் அம்ர்ந்திருக்கும்
காவல் குரங்கு
என்ன சொன்னாலும் கீழிறங்குவதில்லை…
எதிர் வரும் பள்ளங்களைப் பற்றி
உடன் வரும் மீன்களுக்குச்
சொல்வதேயில்லை
ஓடும் நதி…
இருந்தும் தெரிந்து கொண்டு
தாவிக் குதித்தோடுகின்றன
மீன்கள்…
எப்பொழுதும் விழித்திருக்கும் கடலிடமிருந்து
மழையைக் கவர்ந்து செல்கின்றன
மேகங்கள்…
மீட்டுத் தருகிறது காற்று…
நம்மால் தான்
கவர்தலைத் தடுக்கவோ
காற்றைப் பார்க்கவோ முடிவதில்லை..

எனக்குப் பிடிக்கவேயில்லை
மலை உச்சியின் மேலிருந்து
ஒரு பெரும் பள்ளத்தாக்கை
மூக்கின் நுனியில் அணிந்திருக்கும்
கண்ணாடி வழி பார்த்துக்கொண்டிருந்தேன்
அப்பொழுது யாரோ
ஒரு கயிரை வீசி
அப்பள்ளத்தாக்கை மேலே தூக்கத்தொடங்கினர்
எப்படியும் கண்ணாடி கண்ணருகே வந்துவிடுமென்பதால்
எனக்கு
இந்த வாழ்க்கையயும்
அந்தக் கயிரை வீசியவனையும்
பிடிக்கவேயில்லை.....

பாவிப் பெண்ணே
நீ விட்டுச்சென்ற
நிழலின் மேல்
வட்டமடித்தது
கழுகு
படம் பிடிக்கத்தொடங்கியது
பாம்பு
நெருங்கிட முனைந்தது
பச்சோந்தி
கால் குறுக்கிக்கொள்
என்று கத்தியது
காகம்
எங்கிருந்தோ கொண்டுவந்து
சேலையைப் போர்த்தியது
காற்று
வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தது
புட்டம் பெருத்த
ஒரு கூட்டம்
பாவிப் பெண்ணே
அச்சம்
மடம்
நாணம்
பயிர்ப்புடன்
உன் நிழலும்
பத்திரம்.
Monday, June 9, 2014
ஒரு வித்யாசம்தான்...
உங்களுக்கும் எனக்கும்
ஒரு வித்யாசம்தான்:
நீங்கள் ஊளையிடுகிறீர்கள்’
நான் கர்ஜிக்கிறேன்…
நீங்கள் உளருகிறீர்கள்
நான் பேசுகிறேன்….
நீங்கள் கிறுக்குகிறீர்கள்
நான் வரைகிறேன்…
நீங்கள் குதிக்கிறீர்கள்
நான் ஆடுகிறேன்…
நீங்கள்
பாடாய் படுத்துகிறீர்கள்
நான் பாடுகிறேன்:
உங்களுக்கும் எனக்கும்
ஒரு வித்யாசம்தான்
நான் சொல்கிறேன்
நீங்கள் சொல்லவில்லை….
ஒரு வித்யாசம்தான்:
நீங்கள் ஊளையிடுகிறீர்கள்’
நான் கர்ஜிக்கிறேன்…
நீங்கள் உளருகிறீர்கள்
நான் பேசுகிறேன்….
நீங்கள் கிறுக்குகிறீர்கள்
நான் வரைகிறேன்…
நீங்கள் குதிக்கிறீர்கள்
நான் ஆடுகிறேன்…
நீங்கள்
பாடாய் படுத்துகிறீர்கள்
நான் பாடுகிறேன்:
உங்களுக்கும் எனக்கும்
ஒரு வித்யாசம்தான்
நான் சொல்கிறேன்
நீங்கள் சொல்லவில்லை….
ஆண்
அவன் உண்கிறான்
அவன் உறங்குகிறான்
அவன் உறங்குகிறான்
அவன் உடுத்துகிறான்
அவன் சிரிக்கிறான்
அவன் அழுகிறான்
அவன் கோபம் கொள்கிறான்
அவன் வருத்தம் கொள்கிறான்
அவன் வன்புணருகிறான்....
எக்ஸைல் - முதல் நூறு பக்கங்கள்
ஒரு பெரும் விவாதத்திற்கு பின்
படிக்கும் புத்தகம் என்பதால் திறந்த மனதுடனும், எந்த
வித முன் அனுமானங்களுக்கும் இடம்
அளிக்காமலும், எந்த வித எதிர்பார்ப்பையும்
ஏற்படுத்திக் கொள்ளாமலும் படிக்க வேண்டும் என்பதை
முதலிலேயே முடிவு செய்துகொண்டேன். 'ஆட்டோ
பிக்சன்' புதினம் என்பது எக்ஸைல்
பற்றி நான் அறிந்த முதல்
தகவல்.
எடுத்தவுடன்
ஒரு தவறைச் செய்தேன். மொத்தம்
எத்தனைப் பக்கங்கள் என்று தெரிந்து கொள்ள
நினைத்து கடைசி பக்கத்திற்கு புரட்டினால்,
"இது நாவலின் ஐந்தாவது க்ளைமேக்ஸ்"
என்று எழுதப்பட்டிருந்ததைப் படிக்க நேர்ந்தது, அது
பத்தாம் பக்க முடிவிலேயே “இது
நாவலின் க்ளைமேக்ஸ்” என்பதைப் படிக்கும் போது எழ வேண்டிய
அதிர்ச்சியிலிருந்தது காப்பாற்றியது. புதிய புத்தகங்களை வாங்கிய
பின் முதலில் முகர்ந்து பார்ப்பதையும்,
எத்தனைப் பக்கக்கள் இருக்கிறது என்று பார்ப்பதையும் இன்றளவும்
நிறுத்தமுடியவில்லை. J
இரண்டு
அமர்வுகளில் நூறு பக்கங்கள் ஓடிவிட்டது.
முழு புத்தகத்தையும் வாசித்துவிட்டு எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே எழுதுவதற்கு
தூண்டிவிட்டன இந்த நூறு பக்கங்கள்.
சாரு முதல் நூறு பக்கங்களில்
என்ன சொல்கிறார்.
* 1. தான்
தமிழகத்தில் இல்லாமல், தமிழில் எழுதாமல் ஆங்கிலத்திலோ,
அரபியிலோ, எஸ்பாநியோலிலோ, ஏன் மலையாளத்திலோ எழுதியிருக்கலாம்
என்று அங்கலாய்க்கிறார்
*2. இங்கு மக்கள்
விலங்குகளைப் போல் வாழ்கிறார்கள் என்று வருந்துகிறார்
*3. தமிழகத்தில்
யார் யாரெல்லாமோ டாக்டர் பட்டம் வாங்குகிறார்கள், யார் யாரெல்லாமோ இலக்கியவாதிகளாக
கொண்டாடப் படுகிறார்கள் என்று பகடி செய்கிறார்.
*4. போன தலைமுறை எழுத்தாளர்களை
தமிழகம் மறந்துவிட்டது என்று கோபப்படுகிறார். ராஜா
இசைய விட ஏதோ ஒருவர்
பெயரைச் சொல்லி அவரின் இசையே
நெஞ்சைத் தொருகிறது என்கிறார். ஆங்காங்கே மேற்கத்திய மொழிகள் வருகிறது( கூகுள்
ட்ரான்ஸ்லேட்டில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு
மொழி வருவதால் எது என்ன மொழி
என்பதை தெரிந்துகொள்ள அதிகம் முயலவில்லை. மறு
வாசிப்பில் அவரே
அவை என்ன மொழிகள் என்று
கூறியுள்ளாரா என்று பார்க்க வேண்டும்.
* 5. போலி
சாமியார்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், சாலை விதிகளை மதிக்காத
இந்திய மக்கள் என எல்லோரையும்
ஒரு வாங்கு வாங்குகிறார்.
* 6. பின்
"சாரு நிவேதிதா செக்ஸ் ஸ்காண்டல்"க்கு
தன் பக்க விளக்கங்கள் கொடுக்கிறார்.
முதல் நூறு பக்கங்களில் செக்ஸ்
அதிகமில்லை( ஏன் இதை குறிப்பிடுகிறேனென்றால்
சாருவை ‘செக்ஸ் ரைட்டர்’ என்றும்,
‘அடல்ட் ரைட்டர்’ என்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்)
இனி நான்:
*1. உண்மை
தான் சாரு. நீங்கள் தமிழில்
அல்லாமல் வேறு மொழியில் எழுதியிருக்கலாம்.
அதிகம் மதிக்கப்பட்டோ, பாரட்டப்பட்டோ, பரவலாக வாசிக்கப் பட்டோ
இருந்திருப்பீர்கள். இல்லை அடையாளமே இல்லாமல்
கூட போயிருப்பீர்கள். காலத்திற்குதான் வெளிச்சம். ஆனால் தமிழில் எழுதியதனால்தான்
ஆட்டோபிக்சன் எழுத்து முறையை இந்தியாவிலேயே
முதலில் அறிமுகப்படுத்தியவர் என்கிற பெருமைக் கிடைத்திருக்கிறது. இந்த
தேசத்தில்(தமிழ்) எழுத்தாளர்களின் நிலை
இருக்க வேண்டிய நிலையில் இல்லை
என்பது உண்மை. புதுமைப்பித்தனிடம் ஒருவர்
எழுத்தாளர் ஆக வேண்டும் என்று
வந்தாராம். அதற்கு அவர்,வந்தவரை முழு
நேர எழுத்தாளரனால் சோறு கிடைக்காது என்று
அனுப்பி வைத்தாராம். ஒரு சமூகத்தில் சிந்தனையாளர்கள்
முன்னிலைப்படுத்த படவில்லையென்றால் அச்சமூகம் சரியான பாதையில் செல்லவில்லை
என்று அர்த்தம். ஆனால் நாம், ருஷ்யாவைப்
போல் சிந்தனையாளர்களைத் தேடிப் பிடித்துக் கொல்லவில்லை
என்று ஆறுதல் கொள்ளுங்கள்.
*2 . இருக்கலாம்.
எங்களுக்கு "இங்கு சிறு நீர்
கழிக்காதீர்கள்" என்று எழுதியிருப்பது சிரிப்பைத்தான்
தருகிறது. அவமானமெல்லாம் இல்லை. திறந்த வெளியில்
மலம் கழிப்பது இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையாகவே
தெரிகிறது. பெருங்காலம் அடிமைப் பட்டு கிடந்ததால்
இக்கால அரசியல் அதிகாரங்களெல்லாம் புதுசில்லை.
ஆனால் இந்தியாவை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டு அதிலும் குறிப்பாக அமெரிக்காவுடன்
ஒப்பிட்டு நீங்கள் எழுதியிருப்பதை முற்றிலுமாக
ஏற்க இயலாது. ஒப்பீடு என்றால்
எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரம்
மட்டுமே அளவாக இருக்க இயலாது.
இரு நாடுகளிலும் குற்றங்கள் நிகழ்கின்றன. இங்கு ஓடும் பேருந்தில்
ஒரு பெண் வன்புணரப்படுகிறார்(கற்பழிப்பு என்கிற வார்த்தையையே தடை செய்ய
வேண்டும். அங்கு யாரின் கற்பு அழிகிறது?) என்றால்
அங்கு வெள்ளை மாளிகை அதிபர்
அதே குற்றச்சாட்டில் சிக்குகிறார். இங்கு ஜாதி வெறி,
மத வெறி என்றால் அங்கு
இன வெறி. அமெரிக்காவில் நாற்பது
சதவிகதம் மக்கள் மன நோய்க்கு
மருந்து எடுத்துகொள்கிறார்கள் என்றால் இந்தியாவில் எண்பது சதவிகித மக்கள் தங்களுக்கு
மன நோய் இருப்பதையே அறியாமல்
வாழ்கிறார்கள் என்கிறீர்கள். நாங்கள் மன நோயாளிகள்
அல்ல சாரு. நாங்கள் பள்ளிகளுக்குள்
புகுந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் சுட்டுக் கொல்லாதவரை நிச்சயம் மன நோயாளிகள் அல்ல.
இந்தியாவின் அழுக்கு முகங்களைச் சாடும்
அதே நேரத்தில் மற்ற நாட்டிற்கு கொடி
பிடிப்பதை ரசிக்க முடியாது. இந்தியாவைப்
பற்றி பெருமையாக பேசிக்கொண்டே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதே
ஆரோக்கியமானதாகும்.
*3. இதற்கு
நான் எதுவும் சொல்ல இயலாது.
ஏனென்றால் அப்படி ஒரு டாக்டர்
நடிகரின் படங்கள் என்றால் அதிகம்
பிடிக்கும். ஆனாலும் நீங்கள் அவர்
பெயரைக் குறிப்பிட்டிருக்க வேண்டாம் . J
*4. ஆம்
மறதி நம் தேசிய வியாதிதான்.
இசையப் பற்றி எனக்கு அதிகம்
தெரியாது. எனவே ராஜா ரசிகர்கள்
பதில் கூறட்டும்.
*5. எத்தனைப்
படங்கள் வந்தாலும், சத்தியமேவ ஜெயதேக்கள் வந்தாலும் அதையெல்லாம் பார்த்து விட்டு எவ்வளவு பேர்
மாறுவார்கள் என்று தெரியவில்லை. எனவே
நீங்கள் உங்கள் கடமையச் செய்திருக்கிறீர்கள்.
*6. எப்படி
வாழ வேண்டும் என்பதற்கு காந்தியைப் படியுங்கள், எப்படி வாழக் கூடாது
என்பதற்கு என்னைப் படியுங்கள் என்று
சொன்ன கண்ணதாசனைப் போலோ இல்லை என்
வீட்டு படுக்கையறக்குள் எட்டிப் பார்க்கும் உரிமை
உங்களுக்கு இல்லை என்று சொன்ன
கமலைப் போலோ நீங்களும் சொல்லுங்கள்
சாரு. பிறகு
வசைகள் குறையலாம்.
இதுவரை
நான் அதிகம் ரசித்தது, ரசித்த
பகுதி ஆவிகள் உலகம் தான்.
குறிப்பாக இந்திரா காந்தி ஆவியையும்,
ராஜிவ் காந்தி ஆவியையும் பார்க்க
மனமில்லை எங்கள் கட்சியை ஒழித்தவர்கள்
அவர்கள் என்பதால் என்று பக்கிரி ஆவி கூறுவதை அதிகம்
ரசித்தேன்.
எழுத்து
முழுவதும் பகடியை இழையோட விட்டிருக்கிறார்.
அதுவே அதிகம் ரசிக்க வைக்கிறது.
இது தமிழ் மக்களின் தனிச்
சிறப்பு. நக்கல்
செய்வது, நகைச்சுவை ததும்ப பேசுவது தமிழ்
எழுத்தாளர்களுக்கும், கலைஞரகளுக்கும், ஏன் தமிழ் மக்கள்
அனைவருக்குமே கைவந்த கலை. படித்த
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
ஒரு முறை க்ரேசி மோகனும்,
இந்தி எழுத்தாளர் ஒருவரும் தமிழ் படம் ஒன்றின்
வசனங்களை மொழிப்பெயர்த்துக் கொண்டிருந்தார்களாம். ஒரு கட்டத்தில் அந்த
இந்தி எழுத்தாளர் பேனாவைக் கீழே வைத்து விட்டு
சிரித்து சிரித்து மாய்ந்தாராம். மதாராசிகளின் நகைச்சுவையுணர்வே உணர்வு என்றாராம். இதை
எழுதும் பொழுது இப்புத்தகத்தில்
சாரு குறிப்பிட்டுள்ள ஒரு சம்பவம் நினைவுக்கு
வருகிறது. வெளி நாட்டில் ஒரு
ஆண் தெருவில் நடந்து கொண்டு பெரும்
சேஷ்டைகள் செய்து கொண்டிருந்தானாம். அவ்வழியே
வந்த ஒரு ஆணை திடீரென்று
கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல்
பாவனை செய்தானாம். அதற்கு அந்த ஆள்
ஒரு படி மேலே போய்
அவனைச் சுவரோடு சேர்த்து புணர்வது
போல் பாவனை செய்தானாம். அதைப்
பார்த்து தெருவே
சிரித்து மகிழ்ந்ததாம்.. இப்படி ஒரு நாட்டில் வாழாமல்
போய்விட்டோமே என்று சாரு கவலை
கொள்கிறார்.சாரு!!!!! ( Jவாழ்க்கையைக் கொண்டாடுவதைப்
பற்றி எழுதும் பொழுது இதை
எழுதியிருக்கிறார் என்பதையும் சொல்லி விடுகிறேன்)
If i say, only because of transgressive writing , Charu
made the first hundred pages interesting, that’s almost true.
-தொடரும்.
அம்மா
அம்மா
என்ற தலைப்பில்
கவிதைகள் எழுதினேன்
கதைகள் எழுதினேன்
சின்னத் திரையிலும்
பெரிய திரையிலும்
படங்கள் எடுத்தேன்
விருதுகள் வாங்கினேன்
வீட்டிற்கு வந்து
அடுப்படியில் இருந்த
அம்மாவிடம்
விருதுகளைக் காட்டிவிட்டு
அடுத்த வேளை
சாப்பாட்டிற்கு
"ஆர்டர்" கொடுத்தேன்...
என்ற தலைப்பில்
கவிதைகள் எழுதினேன்
கதைகள் எழுதினேன்
சின்னத் திரையிலும்
பெரிய திரையிலும்
படங்கள் எடுத்தேன்
விருதுகள் வாங்கினேன்
வீட்டிற்கு வந்து
அடுப்படியில் இருந்த
அம்மாவிடம்
விருதுகளைக் காட்டிவிட்டு
அடுத்த வேளை
சாப்பாட்டிற்கு
"ஆர்டர்" கொடுத்தேன்...
Saturday, June 7, 2014
காற்றிலும் நீந்தும் இம்மீன்கள்
முற்றத்தில் நின்றுகொண்டு
இரண்டு பெண்கள்
பேசிக்கொண்டிருந்தார்கள்
பிறகு
சிரித்துக்கொண்டார்கள்
பிறகு
பேசிக்கொண்டார்கள்
பிறகு
ஊட்டிக்கொண்டார்கள்
பிறகு
கட்டிக்கொண்டார்கள்
பிறகு
அழுதார்கள்
பிறகு
பேசிக்கொண்டிருந்தார்கள்
பிறகு
பிரிந்து சென்றார்கள்
பார்த்துக்கொண்டேயிருந்தது
ஆண்மை சிறைக்குள்
அடைப்பட்டிருக்கும்
என் கோழை மனம்…
இரண்டு பெண்கள்
பேசிக்கொண்டிருந்தார்கள்
பிறகு
சிரித்துக்கொண்டார்கள்
பிறகு
பேசிக்கொண்டார்கள்
பிறகு
ஊட்டிக்கொண்டார்கள்
பிறகு
கட்டிக்கொண்டார்கள்
பிறகு
அழுதார்கள்
பிறகு
பேசிக்கொண்டிருந்தார்கள்
பிறகு
பிரிந்து சென்றார்கள்
பார்த்துக்கொண்டேயிருந்தது
ஆண்மை சிறைக்குள்
அடைப்பட்டிருக்கும்
என் கோழை மனம்…
Friday, June 6, 2014
தத்துவம்# 2020
மரணமில்லா இடத்தில்
தத்துவங்கள் வாழ்வதில்லை
மரணம்
ஆகப் பெரிய
தத்துவமுமில்லை
சரியென்றும்
தவறென்றும் எதுவுமில்லை
சரியாக சொல்வதென்றால்
எதுவும் நிரந்திரமில்லை!
தத்துவங்கள் வாழ்வதில்லை
மரணம்
ஆகப் பெரிய
தத்துவமுமில்லை
சரியென்றும்
தவறென்றும் எதுவுமில்லை
சரியாக சொல்வதென்றால்
எதுவும் நிரந்திரமில்லை!
Monday, June 2, 2014
‘புத்தனாவது சுலபம்’ – எஸ்.ரா
ஒரு வழியாக “புத்தனாவது சுலபம்” படித்து முடித்துவிட்டேன். தொடர்ந்து வாசித்தால் ஒரு நாளிலும், இடைவெளி விட்டு வாசித்தால் அதிக பட்சம் இரண்டு நாளிலும் முடிக்கப் பட வேண்டிய புத்தகம். செல்பேசிக்கு அடிமை ஆகிவிட்ட காரணத்தாலேயே இவ்வளவு கால தாமதம். இனி பழையபடி புத்தக வாசிப்பினுள் முழுவதுமாய் என்னால் இறங்க முடியும் என்று நம்புகிறேன்..
“புத்தனாவது சுலபம்”- எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் பதினாறு கதைகள்.இலக்கிய வாசிப்பைத் தொடங்குவோர், சிறுகதைகளில் இருந்து தொடங்குவதே சிறந்தது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நாவல்களை வாசிப்பதற்கும், கவிதைகளை புரிந்து கொள்வதற்கும் முதலில் அதிக உழைப்பு தேவைப்படும். இந்த புத்தகத்தின் முன்னுரையில் எஸ்.ரா, சிறுகதை என்பது நீந்திக்கொண்டிருக்கும் மீனை வரைவது போன்றது என்கிறார். ஜெ.மோ அவர்கள் மின்னலின் ஒளியில் உலகை ரசிப்பது போன்றது என்கிறார்.
எனக்கு கவிதைகளுக்கு அடுத்து சிறுகதைகளே பிடிக்கும். கவிதை என்று நினைத்தவுடன் கவிதையப் பற்றிய என் புரிதலை இங்கு பதிவு செய்யாமல் முன்னகர இயலவில்லை. கவிதை என்பது நாம் பார்க்கும் வானம் போன்றது. உண்மையில் வானம் என்று தனியாக எதுவுமில்லை. ஆனால் அங்கு எல்லாமும் இருக்கிறது.
இனி புத்தகத்திற்கு வருவோம்.
எஸ்.ரா அவர்களே குறிப்பிட்டபடி பெரும்பாலான கதைகளில் பெண்களே முக்கிய கதாப்பாத்திரங்களாக இருக்கிறார்கள். இருக்கதான் வேண்டியிருக்கிறது. இன்னமும் சொல்லப் போனால் இதெல்லாம் போதாது. ஆசிட் ஊற்றப்படுவதும், அடுப்படியிலேயே முடங்கிக் கிடப்பதும் இன்றும் முற்றிலும் ஒழியவில்லை.
இரண்டு குமிழ்கள் என்கிற கதை ஒரு பெண் காவலாளி, மற்றும் பெண் கைதியைப் பற்றியதும் ஆகும்.
சமுதாயத்தில் இருவேறு நிலைகளில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் அபத்தங்களையும், அநியாயங்களையும் ஆசிரியர் அழகாக பதிவு செய்திருக்கிறார். எல்லா நிலைப் பெண்களூம் அபத்தங்களால் சூழப்பட்டவர்கள்தான் போலும். டயானா, இங்கிலாந்தின் முன்னாள் இளவரசியைப் பற்றி,” அவர் தங்கக் கூண்டிலிருக்கும் கிளி” என்று படித்தது நினைவுக்கு வருகிறது.
ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பதில்லை, யட்சன் தனித்திருக்கிறான்,
சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிங்கைப் பிடிக்காது, சொந்தக்குரல், கோகிலாவாணியை யாருக்கும் நினைவிருக்காது ஆகிய கதைகள் மனத்தை பிசையச் செய்வன. நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பெண்கள் அடக்கு முறைகளுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது இக்கதைகள்.
இதில் இரண்டு கதைகள் சிறுவர்களுக்கு கூறும் நீதிக்கதைகள் போல் உள்ளன. அவை பேசும் கற்கள், சிறுமீன். மேலும் ஒரு கதை எனக்கு பிடிக்கவில்லை. அக்கதையின் பெயர் சீட்டாட்டம். கவிதைகளில் வார்த்தைகளை வைத்து விளையாடுவதைப் போல் ஆசிரியர் சிறுகதையாய் விளையாடியிருக்கிறார்.
எல்லா நூற்றாண்டுகளிலும் மனிதர்கள் மூட நம்பிக்கைகளினால் பலரை கொன்று குவித்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு கதை- ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே. பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த விஞ்ஞானியை மதவாதிகள் உயிரோடு எரித்ததை மீள் உருவாக்க கதையாக தந்திருக்கிறார் ஆசிரியர். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்ய மாட்டோம் என்று இந்தியப் பெண் ஒருவரைக் கொன்ற நாடு அதன் பக்கத்து நாடாக இருக்கும்.
பெண் என்று எவருமில்லை என்கிற கதை புதுமைப்பித்தனின் கதை ஒன்றை நினைவூட்டுகிறது( பெயர் மறந்துவிட்டேன், மன்னிக்கவும்)
இரண்டு கதைகள் எனக்கு அதிகம் பிடித்தன். எதார்த்தத்தின் மிக அருகில் சென்றவைக்காக – இரண்டு குமிழ்கள் மற்றும் கதவைத் தட்டாதே அஷ்ரப்
எஸ்.ரா பல கதைகளில் அருகாமை என்கிற சொல்லை அருகில் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளது அதிர்ச்சி அளித்தது. அருகாமை என்றால் அருகில் இல்லாமை என்பது பொருள். பெரிய எழுத்தாளர்கள் கூட இந்த பிழையைச் செய்வது வருத்தமளிக்கிறது.
இந்தப் பதிவு புத்தக வாசிப்பைப் பற்றிய என் முதல் பதிவு
‘புத்தனாவது சுலபம்’- விலை ரூபாய் 150. உயிர்மை வெளியீடு. பிளிப் கார்ட்டில் கிடைக்கிறது.

Subscribe to:
Comments (Atom)