இன்னும் சற்று நேரத்தில்
முடியப் போகிற
இந்நாளுக்கு
ஒரே படபடப்பு..
பரிதவிப்பு..
உயிலின் ரகசியத்தை
சொல்லத் துடிக்கும்
மரணத்தின் விளிம்பில்
நிற்கும் கிழவனின்
பரிதவிப்பு..
அதற்கு
இன்றைக்கான கவிதையைத்
தராமலே போகும்
குற்றவுணர்வு
மறுதலிப்புகள் ஏதுமின்றி
போட்டதைப் பெற்றுச்செல்லும்
பிச்சைக்காரனாய் நான்
எவ்வளவு முயன்றும்
காப்பாற்ற முடியாத நோயாளியாய்
சாகிறது
இந்நாள்
No comments:
Post a Comment