Monday, June 9, 2014

எழுதி முடித்த கவிதைக்கு
விளக்கமெழுதி அனுப்பி வைத்தேன்
எதுகை மோனைப் பீ
என்று பதில் வந்தது

பீ யென்றெண்ணி
சாக்கடையில் வீசினேன்
பீ இல்லை
முத்தென்று
பன்றியொன்று
திருப்பித் தந்தது

முத்தெல்லாம்
கோர்த்து
மாலை செய்தேன்

பொக்கிஷமாகி
பெட்டிக்குள்
கிடக்கிறது

அடச் சீ..

இப்பொழுதுதான்
துர்நாற்றம் வீசுகிறது

No comments:

Post a Comment