Tuesday, October 28, 2014

புல்வெளிதேச‌ம்

புற்களின் மீது
நடப்பதுபோல்
சுகம் தருகிறது
தற்கொலை செய்துகொள்ளவேண்டும்
என்ற எண்ணம்

ஒவ்வொரு புல்லின்மீதும்
ஒரு துளிக் கண்ணீரை
வைக்க‌
அழகாய் இருக்கிறது
ம‌ர‌ண‌த்தின் வாச‌ல்

புற்க‌ளால்
பின்ன‌ப்ப‌ட்ட‌ கயிற்றில்
தூக்கிட்டுக் கொள்ள‌வேண்டும்

ஒவ்வொரு மரணத்திற்கும்
ஒரு நிறமுண்டு
புல்லின் நிறம்
எனது

த‌ற்கொலை எண்ண‌ங்க‌ள்
எப்பொழுதும் அழ‌கான‌வை
அது
எல்லா ம‌னித‌ர்க‌ளும்
ஒரு முறையேனும்
போய்வ‌ரும் புல்வெளிதேச‌ம்!


No comments:

Post a Comment