Sunday, October 5, 2014

தண்ணீர்

இரண்டாயிரத்தின் பிற்பாதியில் எங்கள் ஊரில் மாதக் கணக்கில் தண்ணீர் பிரச்சனை இருந்தது. லாரி தண்ணீரும் கிடைக்காத நிலையில், ஊருக்கே தண்ணீர் தந்த கிணற்றை நினைத்துப் பார்க்கிறேன்.  வாய்க்கால் வரப்புகளைத் தாண்டி, ஒரு சிறு குன்றின் அருகில் இருந்த அக்கிணற்று நீருக்காக, சைக்கிளில், டி.வி.எஸ் எக்சலில் குடங்களை வைத்துக் கொண்டு ஊரே செல்லும் காட்சி கண் முன் தோன்றி மறைகிறது. ஒரு குடம் தண்ணீர் மூன்று ரூபாய். :)
புளு வரும் தண்ணீர், சாக்கடை நீர் கலந்து வரும் தண்ணீர், மஞ்சள் நிறத்தில் தண்ணீர்,துர்நாற்றம் வீசும் தண்ணீர் – அசோகமித்திரன் அவர்களின் “தண்ணீர்” காட்டும் எல்லா தண்ணீர்களைப் பற்றியும் எனக்கு அறிமுகம் உண்டு
நினைவூற்றைக் கிளறி விட்ட புத்தகம் என்பதாலேயே இப்புதகம் மனதிற்கு நெருங்கிய ஒன்றாக உள்ளது. யதார்த்தம் என்பது வார்த்தைகளில் தொடங்கி, இக்கதையின் கதை மாந்தர்களின் வாழ்வு வரை விரவி உள்ளது. பெண்களே முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். ஜமுனாவின் வீட்டு ஜன்னல் வழியே இக்கதை பயணிக்கிறது.
கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் :)
சில இடங்களில் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. ஜெ.மோ வை தொடர்ந்து படிப்பதால் ஒருவேளை இப்படி தோன்றலாம். முடிவு மறுப்பதற்கு இல்லையெனினும் சுருக்கமாக வந்த முந்தைய நிகழ்வுகளால் மனதில் ஒட்டவில்லை.

No comments:

Post a Comment