Sunday, October 5, 2014

அஞ்சலி!

அவன்
 இன்று
 அங்கு வந்திருந்தான்

க‌ம்பீர‌மான‌
 அழ‌கான‌
 த‌ன் ம‌ர‌ணத்தைக் காட்ட‌
 உடல் கிழிந்து இறந்த‌
 ஒரு பெண்ணுடன்
 அவன்
 இன்று
 அங்கு வந்திருந்தான்

“இங்குதான்
 எல்லோரும்
 பார்க்க‌
 என் மரண நாட‌க‌ம்
 இனிதே நிறைவேறியது

அதோ
 அங்கு
 சிதிறிக் கிடப்பவை
 என் இறுதி வேண்டுதல்கள்

இங்கிருந்து அவ்வளவு தூரமே
 என் இறுதிப் பயணம்

பதினெட்டு வயதுக்கு உட்பட்டவன் தான்
 இவனும்

ஆனால்
 கருணையுள்ளவன்

ஓட ஓட விரட்டியோ
 கதறக் கதற குதறியோ
 நடு ரோட்டில் வீசியோ
 என்னைக் கொல்லவில்லை

எல்லோரும்
 கதறினோம் பதறினோம்
 என்பதற்காதாரமாய் படமெடுத்துக்கொண்டார்கள்

‘விட்டுவிடு
 என்று கெஞ்சியிருந்தால்
 விட்டிருக்கும்
 என்று யாரும் அறிவுரை சொல்லவில்லை’

உனக்கு
 இப்படி ஒரு மரணம் வாய்த்திருக்கலாம்” என்றான்

அவள் பேசவில்லை
 ஆசிட் ஊற்றப்பட்ட அவள்
 இன்றும் பேசவேயில்லை

No comments:

Post a Comment