Tuesday, October 28, 2014

முத்தம்

நான் ஒளித்து ஒளித்து
வைத்திருக்கும் பொருள்களுள்
மிகவும் விலை உயர்ந்தது
‘முத்தமிடவேண்டும்’என்ற ஆசை

முத‌ன் முத‌லாய்
பார்த்த‌ சினிமாவில்
வ‌ந்த‌ முத்த‌மொன்று
ச்சீ.. ச்சீ என்று க‌ண்ணை மூடிக்கொண்ட‌வுட‌ன்
என‌க்குத் தெரியாம‌ல்
என் ச‌ட்டைப் பையில்
வ‌ந்து ஒளிந்துகொண்ட‌தாக‌ நியாப‌க‌ம்

பின்பு அதை
முழுக்கைச் சட்டையை
மடித்து விட்டுக்கொள்ளத் தொடங்கிய
ஒரு நாளில்
தற்செயலாய்க் கண்டுபிடித்தேன்

நன்றாகவே வளர்ந்திருந்தது,
நெற்றியிலிருந்து கன்னங்களுக்கும்
கன்னங்களிலிருந்து இதழ்களுக்கும்

அதை,
தனி அறைகள்
இல்லாத வீட்டில்
கவிதைகளில்
ஒளித்து வைக்கத் தொடங்கினேன்

முதற் காதல் நாட்களில்
என் தோட்டமெங்கும் பூத்த‌
ஒரே பூவது

இதழ்களால் எழுதப்போகும்
என் முதல்
காதல் கவிதைக்கான‌
தலைப்பை
தந்துகொண்டிருக்கும்
இம் மழைக்கு
நன்றி

No comments:

Post a Comment