நிலா,
இது ஒரு காதல் கடிதம். நான் உன்னைக் காதலிக்கிறேன். இதைச் சொல்லிவிட்டே ஆரம்பிக்கிறேன். இல்லையேல் இந்த இரண்டுவருடங்களாக, ஒவ்வொருமுறை உன்னைப் பார்க்கும்பொழுதும் சொல்லிவிட நினைத்து முடியாமல் போனதுபோலாகிவிடக்கூடும்.
முதன்முதலாக உன்னைப் பார்த்தபொழுது ஒரு புன்னகை, ஒரு ஹலோ. நீ சென்றுவிட்டாய். அந்த நாள் முழுவதும், ஏதோ மனதில் ஓடிக்கொண்டிருந்தது. மறுநாள் உன்னைப் பார்த்தபொழுது இல்லை உன் இதழில் தவழந்த புன்னகையைப் பார்த்தபொழுதுதான் நான் என் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொண்டேன். ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப் புன்னகை என் கண்களில் ஒரு மச்சம் போல் ஒட்டிக்கொண்டுவிட்டது.
மச்சம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. உனது வலது உள்ளங்கையில் ஒரு மச்சம் உள்ளது.அதைப் பற்றி நாம் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கையில் நான், உனக்கு அது கடவுள் கொடுத்தனுப்பிய முத்தம் என்றேன். வாய்விட்டுச் சிரித்தாய். அந்த நொடி, உறைந்த நதியில் நடப்பது போல் பதட்டமும், பயமும், சந்தோஷமும் அடைந்தது மனம் என்று சொன்னால் சரியாய் இருக்கும். ஓடும் நதி நீ, சிரிக்கையில் கொட்டும் அருவியாகிறாய்.
நிலா, இந்த ஆறு வருடங்களில் எப்பொழுது என் காதலை நான் உணர்ந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நாளும் உன்னைப்பற்றி நினைக்காமல் தொடங்கியதும், இல்லை முடித்ததும் இல்லை. காதலில் விழுந்தவர்கள் கனவுலகில் மிதப்பார்கள், ஆகாயத்தில் பறப்பார்களென்றெல்லாம் சொல்வார்கள். என் கதை சற்று வித்யாசமாக உள்ளது. நிலா, நீ என் வாழ்க்கையை உன் அலகுகளால் கொத்திச் சென்று வானில் போட்டுவிட்டாய். நான் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மேகங்கள் இல்லா வானம். ஒரு புன்னகையில் என் ஜீவ நதி கரைதாண்டும். வெறும் மழை எதற்கு! நட்சத்திரங்கள் இல்லா வானம். மின்னும் உன் கருவிழிகள் முன் நட்சத்திரங்கள் எம்மாத்திரம்! சூரியன் இல்லா வானம். சுட்டெரிக்கும் காதல் வாழும் இடத்தில் சூரியந்தான் என் செய்யும்! என் வாழ்க்கையின் வான்வெளிகளில் நான் பார்ப்பதெல்லாம் நிலா. காலையும் நிலா;மாலையும் நிலா....
பித்துபிடித்தவன் போல்தான் இருக்கிறேன் நிலா. உன்னைப் படைத்தவன் வந்தாலும் அவனையும் தள்ளி நின்றுதான் உன்னிடம் பேசவேண்டும் என்பேன். ஏன் நிலா காதலில் பித்து தவறு என்கிறாய்? என் பித்தின் நிலை அறியமாட்டாய் நீ. உன் கைகளில் ஓடும் பச்சை நரம்பை ஏதேச்சையாய் ஒரு நாள் தொட்டுவிட்டேன். பின் அதிலிருந்து வெளிவர வழி மறந்து இரண்டு நாட்கள் அலைந்தேன். உன் கண்களில் கண்ணீரைக் காணுபொழுது என் உடலெல்லாம் நீராகி வழிந்தோடுவதாய் உணர்வேன். பித்தன் தன் பித்தை உணர்ந்தவனானால், தெளிவிக்கும் மருந்துண்டோ சொல்...
நிலா நீ காதல் தேவதையின் செல்லக் குழந்தை. புன்னகை தோட்டத்து மலர்களில் தேன் நீ. ஒருமுறை புதிய சுடிதார் ஒன்றை அணிந்துவந்து எப்படி இருக்கிறது என்று கேட்டாய். திருவிளையாடல் படத்தில் சிவனாய் நடித்த சிவாஜி அவர்களின் இசை நிற்க அடங்கும் உலகம் போல் நான் ஸ்தம்பித்து நின்றேன். என் விழிகள் மட்டும் இமைக்க மறுத்து பார்த்துகொண்டிருந்தன உன்னை. அந்த ஒரு நிமிடம் என் வாழ்வில் கடவுள் உண்டு அவரின்றி உன்னை யார் படைத்திருப்பார் என்று நம்ப வைத்தது. பின் உன் புன்னகையால் மீண்டும் உயிர்பெற்று நினைவுதிரும்பியவனாய் நன்றாக உள்ளதென்றேன். அன்று என் நாட்குறிப்பில் இவ்வாறு எழுதி வைத்தேன். "பூந்தோட்டதில் பூக்களைப் பறிக்காதீர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். பூவொன்றோ புத்தாடையுடுத்தி வந்து எப்படி? என்று கேட்கிறது!"
காதல் எல்லோரையும் கவிஞர்களாக்கும். என் விசயத்தில் அதற்கு நேர்மாறாய் நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன். உன் பெயருக்கு பக்கத்தில் எல்லாமும் அர்த்தமிழக்கின்றன் நிலா.
நீ தலையில் பூச்சூடி நான் பார்த்ததில்லையே என்றோர் நாள் கேட்டேன். ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுச் சென்றாய். ஆணவக்காரி என்று உன்னைத் திட்டினேன். இப்பொழுது நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது. இவ்வுலகில் பூக்கும் எம்மலரும் நீ சூட தகுதியற்றதாய்தான் இருக்கும். நிலா சூட நட்சித்திரங்களைத்தான் கோர்க்கவேண்டும்!
மழை பெய்கிறது நிலா. ச்சோவென்று பெய்கிறது. நான் மட்டும் நனையவில்லை. உன்னோடு மூங்கில் காடொன்றில் நடை போக வேண்டும். துளையுண்ட மூங்கில்களின் கீதம் கேட்டுக்கொண்டே நீண்ட தூரம் நடை போகவேண்டும். உன்னோடு ஒரு பரிசல் பயணம் செல்லவேண்டும். காதல் நதியில் நாம் போவதுதானே தூரம்.
எங்கிருக்கிறாய் நிலா. ஒரு சொல்லின் முடிவில் ஒரு சொல் பிறக்கிறது. முடிந்த சொல் பின் தான் பெரிதாய் மிகப் பெரிதாய் வளர்கிறது. நதி முடிந்து கடலாவது போல். ஒரு கல் உடைந்து சிற்பமாகிறது.வைக்குமிடத்தில் வைத்தால் அதுவே கடவுளாகிறது. நம்மிடையே இருக்கும் நட்பும் காதலாகட்டும் நிலா. நம்மிடையே இருக்கும் இக்கைக்குட்டை அளவு இடைவெளியையும் காதலால் நிரப்புவோம். சம்மதமா?
Sunday, October 25, 2015
Saturday, August 15, 2015
மழை பெய்யலாம்
வானை நோக்கி
பெய்யும் எண்ணங்களுக்கு
நினைவுகள் என்று
பெயர் வைக்கலாம்
அவ் வானிற்கு
மனம் என்று
பெயர் வைக்கலாம்
ஒவ்வொரு
மழை நாளிலும்
மேகங்கள் செய்யலாம்
முதல் துளியில்
அழவோ
சிரிக்கவோ செய்யலாம்
வானை நோக்கி
பெய்யும் எண்ணங்களை
தடுத்து நிறுத்தலாம்
தடுத்து நிறுத்த
மழையில் நனையலாம்
நனைந்தபின்
அழவோ சிரிக்கவோ
செய்யலாம்
வானமோர் நாள்
கரைந்து போகலாம்
அதுவரை
மழையில் நனையலாம்
மழை
இங்கு
மழையும் ஆகலாம்
#
எண்ணங்கள்
நினைவுகள் ஆகலாம்
நினைவுகள்
எண்ணங்கள் ஆகலாம்
அப்புள்ளியில்
நாம்
தொலைந்து போகலாம்
அதனாலென்ன
இந்த மழை
தினமும் பெய்யலாம்!!
##
பெய்யும் எண்ணங்களுக்கு
நினைவுகள் என்று
பெயர் வைக்கலாம்
அவ் வானிற்கு
மனம் என்று
பெயர் வைக்கலாம்
ஒவ்வொரு
மழை நாளிலும்
மேகங்கள் செய்யலாம்
முதல் துளியில்
அழவோ
சிரிக்கவோ செய்யலாம்
வானை நோக்கி
பெய்யும் எண்ணங்களை
தடுத்து நிறுத்தலாம்
தடுத்து நிறுத்த
மழையில் நனையலாம்
நனைந்தபின்
அழவோ சிரிக்கவோ
செய்யலாம்
வானமோர் நாள்
கரைந்து போகலாம்
அதுவரை
மழையில் நனையலாம்
மழை
இங்கு
மழையும் ஆகலாம்
#
எண்ணங்கள்
நினைவுகள் ஆகலாம்
நினைவுகள்
எண்ணங்கள் ஆகலாம்
அப்புள்ளியில்
நாம்
தொலைந்து போகலாம்
அதனாலென்ன
இந்த மழை
தினமும் பெய்யலாம்!!
##
Friday, August 14, 2015
முதல் அரசியல்வாதி
தன் பாபங்களுக்கு
தன் புண்ணியங்களுக்கு
தன் வெற்றிகளுக்கு
தன் தோல்விகளுக்கு
தன் ஆசைகளுக்கு
தன் நிராசைகளுக்கு
தன் சிரிப்பிற்கு
தன் அழுகைக்கு
தன் வாழ்விற்கு
தன் சாவிற்கு
கடவுளைக்
கை காட்டியவன்
சாத்தான்
அதைப் பரப்பியவன்
உலகின்
முதல் அரசியல்வாதி
Sunday, August 2, 2015
நான் என்னும் சுயநலவாதி
ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர மற்ற எல்லோரும் போய்விட்டார்கள். வீட்டிலிருக்கும் சோற்றை வைத்துக்கொண்டு இரண்டு நாட்கள் ஓட்டலாம். அதன் பிறகு... எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தனியாக கிடந்து சாவதற்கு பயம். எல்லோருடனும் சென்றுவிடத் துடித்தது மனம். இருந்தும் இரண்டு நாட்கள் கழித்தே கிளம்பினேன். அதற்குள் மொத்த ஊரும் வெளியேறியிருந்தது.
மாற்றுத் துணி இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு நான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு கடைசியாக வெளியேறத் தொடங்கினேன். இரண்டு மைல்களுக்கு, எதிரே ஒரு உயிரையும் பார்க்கவில்லை. நான் பயப்படத் தொடங்கினேன். ஊரை விட்டு வெளியேறும் போது எங்கள் ஊர்த் தெய்வம் எல்லோருக்கும் அவர்கள் அதுவரை வாழ்ந்ததற்கேற்ப வரங்கள் கொடுத்தனுப்பியது. எனக்கு இரண்டு வரங்கள் கிடைத்தன. அதிலொன்றைப் பயன்படுத்தி ஊரார் இருக்கும் இடத்திற்குப் போகலாம் என்று ஒரு கணம் தோன்றியது. இருட்டும் வரை நடப்போம் அதன் பிறகு வேண்டுமானால் ஒரு வரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கும்பொழுதே சற்று தூரத்தில் ஒருவர் சென்றுகொண்டிருப்பது தெரிந்தது.
ஓட்டமும் நடையுமாக அவரை நோக்கிச் சென்றேன். அவரை நெருங்கிய நொடி அவர் திடீரென்று மறைந்துவிட்டார். எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக பிரமை இல்லை. இவ்வளவு நேரம் கண் முன்னே இருந்தவர் திடீரென்று எப்படி மறைந்தார்... ஒரு வேளை அவர்.. அவர் வரத்தைப் பயன்படுத்தி மறைந்திருக்க வேண்டும். ஆனால் ஏன்? ஏன் நான் நெருங்கி வந்தவுடன் அவ்வாறு செய்யவேண்டும்? சற்று நேரம், காற்றடிக்காத நேரத்தில் நிற்கும் மரத்தைப் போல் அசையாது, புரியாது நின்றிருந்தேன்.
ஒரு வழியாக மக்கள் கண்ணில் படத் தொடங்கியபொழுது நன்றாக இருட்டியிருந்தது. நீண்ட தூரம் நடந்த களைப்பாற ஒரு மரத்தடியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். தாகமெடுத்தது. பசி வேறு. இம்முறை யாரும் மறைந்துவிடக்கூடாது... பயத்துடனேயே சற்றுத் தள்ளி படுத்திருந்த ஒருவரிடம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டேன்.
தலையைத் தூக்கிப் பார்த்தவர் எதுவும் பேசாமல் திரும்பவும் படுத்துக்கொண்டார். ஒவ்வொரு மரத்தடியிலும் குழந்தைகள், பெரியவர்களென ஒரு குடும்பமோ, நான்கைந்து பேர்களாலான சிறு கூட்டமோ இருந்தது. மொத்தம் ஐம்பது பேர்களாவது இருப்பார்கள். ஒவ்வொரு மரத்தடியாய்ச் சென்றேன். சிலர் இல்லை என்றார்கள். சிலர் பதில் சொல்லவில்லை. கடைசியாக, ஒரு குழந்தையுடன் இருந்த பெண்ணிடம் சென்றேன். " அம்மா,மிகவும் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா". அவளும் எதுவும் பதில் சொல்லாமல் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த தன் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"அம்மா, நான் நம்மூரில் இருந்து கிளம்பியது முதல் எதுவும் சாப்பிடவில்லை..பசி.... தாகத்தையாவது தணித்துக்கொண்டால்தான் என்னால் இனி நடக்க இயலும்.. நாவை நனைத்துக்கொள்ளுமளவு நீர் தாருங்கள், அது போதும்”, என்றேன். அவள் அப்பொழுதும் எதுவும் பேசவில்லை. எனக்கு கண்களில் நீர் முட்டியது. கனவிலும் இப்படி ஒரு நிலை வரும் என்று நினைக்கவில்லை. அவளைச் சொல்லியும் குற்றமில்லை. பஞ்ச காலத்தில் யாரை நாம் குறை சொல்ல முடியும்.
அவள் தரப்போவதில்லை என்று திரும்ப எத்தனிக்கையில், " சுயநலவாதி" என்று அவள் சொல்வதுபோல் கேட்டது.
"என்ன சொன்னீர்கள்?" அவள் குழந்தையை எடுத்து மடி மீது வைத்துக்கொண்டு அதன் மேல் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டே, " உன்னிடம் எத்தனை வரங்கள் உள்ளன?" என்று கேட்டாள்.
"இரண்டு.."
"அதிலொன்றைத் தருவதாகச் சொன்னால் உனக்கு தண்ணிர் தருகிறேன்"
"அம்மா..." விக்கித்து நின்றேன்.
"அதான் சொன்னேன் சுயநலவாதியென்று.. போ..போ"
குழம்பிய மனதுடன் நான் படுத்திருந்த மரத்தடிக்கே திரும்பினேன். சுய நலவாதி? அந்த வார்த்தைக் கேட்டுக்கொண்டே இருந்தது. திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப.. ஏன் என்னை அப்படிச் சொன்னாள்? அதிலும் ஒரு வார்த்தைக்கூட பேசுவதற்கு முன்... அவள் பார்வையில் ஏன் அப்படி ஒரு வெறுப்பு? குஞ்சுகளைக் தூக்கிச் செல்ல வரும் பருந்தைப் பார்த்து கோழி கொள்ளும் பதட்டம் போல் மனம் பயமும், கோபமும் கலந்த பதட்டத்துடன் இருந்தது. பின் அப்படியே தூங்கிப் போனேன்.
கண் விழித்த பொழுது நல்ல வேளையாக எல்லோரும் அங்குதானிருந்தார்கள். சூரியன் வெளிவரத்தொடிங்கியதும் பறவைகள் கத்திக்கொண்டே இருந்தன. தலைவலி எடுத்தது. வேறு சமயமாய் இருந்திருந்தால் என் எல்லா வலிகளுக்கும் தீர்வாக பறவைகளின் ஒலிகள் இருந்திருக்கும். முந்திய நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்ததனால் என்னோடு சேர்ந்து பசியும் கண் விழித்துக்கொண்டுவிட்டது.
ஒரு குழந்தை அப்பொழுது என்னைக் கடந்து ஒரு மேடான பகுதியில் இருந்து கொண்டு ஏதோ சொல்லிக் கத்தியது. மொத்த மக்களும் அக்குழந்தை இருந்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு தண்ணீர் ஊற்று ஒன்று உருவாகி இருந்தது. மக்கள் எல்லோரும் தாகம் தணித்துக்கொள்ளத் தொடங்கினர். வேகமாக ஓடிச் சென்று கூட்டத்தில் புகுந்தேன். முதியவர் ஒருவர் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தார். அவர் குடித்து முடித்து திரும்பியதும் ஊற்றை நோக்கி குனியப் போன என்னைத் தடுத்தார்.
"ஐயா நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. மயக்கமாய் இருக்கிறது. தண்ணீரையாவது குடிக்க அனுமதியுங்கள்.." கெஞ்சத் தொடங்கினேன்.
"சுயநலவாதி" முதியவர் முகம் சிவக்க என்னை முறைத்தபடி ஊற்றை நெருங்கவிடாதபடி நின்றுகொண்டார்.
" என்ன..." எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவரும் என்னை சுயநலவாதி என்கிறாரே என்று கோபம் வந்தது.
"தண்ணீர் குடிப்பது சுயநலமா?" என்று முதியவரைப் பார்த்துக் கத்தினேன்.
"அவ்வூற்று அந்தக் குழந்தையின் வரம்" என்றார். நீரில் வரும் பாம்பைக் கண்டு இலையில் இருக்கும் தவளையாய் தவளையாய் தவித்தேன். நகரவில்லை.
"போ .. போய் உன் வரங்களைப் பயன்படுத்திக்கொள்" முதியவர் சொல்லிவிட்டு என்னைத் திரும்பிப் பார்க்கமால் சென்றார். அதற்குமேல் அங்கு நிற்க இயலாமல் மரத்தடிக்குத் திரும்பினேன். அது புளிய மரம் என்பதை அப்பொழுதுதான் கவனித்தேன். நான் படுத்திருந்த இடத்தைச் சுற்றி புளியம்பழங்கள் விழுந்து கிடந்தன. கைகொள்ளுமளவு பொறுக்கிக்கொண்டு ஒன்றின் ஓட்டை நீக்கிச் சாப்பிடப் போனேன்.
"அதைச் சாப்பிடாதே.. எங்களிடம் கொடு" என்று கத்திக்கொண்டே என்னை நோக்கி இருவர் ஒடி வந்தனர். இருவரும் மெலிந்த தேகத்தினராய் இருந்தனர்.
"ஏன் சாப்பிடக்கூடாது"
" நீ கடைசியாய் உணவருந்தி எத்தனை நாளாகின்றன?"
"ஒரு நாளாகிறது"
" நாங்கள் சாப்பிட்டு ஒரு வாரமாகிறது.. குடு எங்களிடம், சுயநலவாதி" என்றான் ஒருவன்.
" நீங்கள் எல்லாவற்றையும் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், என்னைச் சுயநலவாதி என்று மட்டும் சொல்லாதீர்கள்" என்றேன். முறைத்துவிட்டு இரண்டு பழங்களை மட்டும் விட்டுவிட்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றனர். அந்தப் பழங்களோடு நாள் கழிந்தது. அடுத்து இரண்டு நாட்களும் அதே நிலைதான். ஒரு நாள் மட்டும் தண்ணீர் குடிக்க அனுமதித்தார்கள். சுய நலவாதி என்ற சொல் மட்டும் தாராளமாக கிடைத்தது.இப்படியாக ஒரு வாரம் புளியம் பழங்களும் தண்ணீருமாக என் உயிரைக் காத்து வந்தன.
ஒரு வாரத்தில் அவ்விடம் ஒரு சிறு கிராமமாக மாறியிருந்தது. மக்கள் தங்கள் வரங்களைப் பயன்படுத்தி ஒரு கிராமத்தை உருவாக்கியிருந்தார்கள். என்னிடம் இரண்டு வரங்கள் பயன்படுத்தப்படாமலேயே இருந்தன. யாரும் என்னிடம் கேட்கவுமில்லை. நானும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன்.
பசியைவிட ஒருவரும் என்னிடம் முகம் குடுத்துப் பேசாதது என்னை வாட்டி வதைத்தது. ஒரு பிற்பகலில் எல்லோரும் அவரவர் வீட்டில் உணவருந்திக்கொண்டிருக்கும்பொழுது ஒவ்வொரு வீடாகச் சென்று, "என்னையும் இந்தக் கிராமத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்... எனக்கு சாப்பாடு தர வேண்டாம், தங்க இடம் தர வேண்டாம், உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டாலே போதும்.. நான் சாகவும் தயார்" என்று கத்தினேன்.
ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியே வந்தனர். மொத்தமாக எல்லோரும் வந்ததும், " ஏன் என்னை மட்டும் ஒதுக்கி வைத்துள்ளீர்கள், ஏன் என்னைச் சுயநலவாதி என்று வசைப் பாடிக்கொண்டே இருக்கிறீர்கள்" என்றேன். கூட்டத்திலிருந்து என்னைத் தண்ணீர் குடிக்கவிடாது தடுத்த பெரியவர் குரல் கேட்டது.
" நீ ஏன் உன் வரங்களைப் பயன்படுத்தவில்லை?"
"எனக்கு அவ்வரங்களைப் பயன்படுத்தி என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாரேனும் என்னிடம் பேசினால், பழகினால். என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டிருந்தால் இக்கிராமத்தை உருவாக்க நானும் என் வரங்களைத் தந்திருப்பேன்" என்றேன்.அவர் அப்பொழுதும் என்னைச் சுயநலவாதி என்றார்.
"நீங்களெல்லோரும் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு என்னை ஏன் சுய நலவாதி என்கிறீர்கள்" என்று கத்தினேன். பின்னாலிருந்து ஒரு பெண் குரல், " உனக்கு உன் பெற்றோர் யாரென்று தெரியுமா?" என்று கேட்டது. முதன் முதலில் என்னை சுய நலவாதி என்று அழைத்தப் பெண்.
" தெரியாது.. நான் பிறந்த ஒரு வருடத்திலேயே அவர்கள் இறந்து விட்டார்கள்"
"உன் பாட்டன்களைப் பற்றி?"
" இல்லை.. ஏன் கேட்கிறீர்கள்"
"உன் அப்பாவைப் பெற்ற பாட்டன் காலம் வரை உன் வம்சந்தான் நம் ஊரை ஆண்டு வந்தார்கள்" அந்தப் பெண் மேலும் சொன்னாள்
" நம் ஊரில் முதன் முதலில் பஞ்சம் வந்தது உன் அப்பாவின் காலத்தில். மழை பொய்க்கத்தொடங்கியது. குளங்கள் வற்றின. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்கியது. ஆனால் உன் வீட்டில் மட்டும் மூன்று வேளையும் உலை கொதித்தது. ஊரில் ஒவ்வொருவராக பசியில் சாக, எழும் ஒப்பாரி கேட்டுத்தான் நீ வளர்ந்தாய். "
"இல்லை நீங்கள் பொய் சொல்கிறீர்கள்"
"உன் பெற்றோர் எப்படி இறந்தனர் என்று உனக்குத் தெரியுமா?" நான் இல்லை என்று தலையசைத்தேன்.
" ஒரு நாள் இரவு வீட்டிலிருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஊரைக் விட்டுப் போகும் பொழுது நம் ஊர் தெய்வம் அடித்துவிட்டது. நீ குழந்தையாய் இருந்ததால் நீ மட்டும் தப்பித்தாய். அதுமுதல் உன் அத்தை உன்னை எடுத்து வளர்த்தாள்" என்றாள். நெருப்பில் விழும் நீர்த்துளிகளாய் என்னுயிரை அவளின் வார்த்தைகள் அணைத்துக்கொண்டிருந்தன. பத்து வருடப் போராட்டத்திற்குப்பின் ஊரை மீட்டோம். ஆனால் இம்முறை வந்த பஞ்சம் மொத்தமாக ஊரை விழுங்கிவிட்டது. சரி சொல் நாங்கள் எல்லோரும் ஊரை விட்டு வந்த பின்பும் உன் வீட்டில் சாப்பாடு இருந்ததே எப்படி?
நான் அவளையே பதில் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். "சொல்.. சுயநலவாதி பெற்ற சுய நலவாதியே பதில் சொல்" அந்தப் பெண் கொஞ்சமும் கருணையற்றவளாய் என்னைக் கொன்று கொண்டிருந்தாள்.
" என்னை நம்புங்கள் சத்தியமாய் இவை எதுவுமே எனக்குத் தெரியாது."
அவள் நம்பவில்லை. அவர்கள் யாரும் என்னை நம்பவில்லை. அடுத்தடுத்து ஒவ்வொருவராய் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டனர். எல்லாமே எனக்குப் புதிதாய் இருந்தன. சுய நலவாதிப் பெற்ற சுய நலவாதியை யாரும் நம்பவில்லை.
குளத்தில் விழுந்த கல்லாய் நான் மரத்தடிக்குத் திரும்பினேன். ஒரே ஒரு கிளையின் நிழலில்தான் உனக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று அங்கு எழுதி வைத்திருந்தார்கள்.

Thursday, July 2, 2015
மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த
அந்த இரண்டு சிறுமிகளைச் சுற்றிலும்
கடவுள்களின் ஆவிகள்
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன
அந்த இரண்டு சிறுமிகளைச் சுற்றிலும்
கடவுள்களின் ஆவிகள்
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன
எல்லா கடவுள்களின் பிணங்களையும்
உள்ளிழுத்துக்கொண்ட பின்பும்
தணியாக் கோபத்துடன்
அலைந்து திரிந்துகொண்டிருந்தன
அந்த மரத்தின் வேர்கள்
இதில்
அவன் தவறு ஏதுமில்லையென்று
கூடி நின்ற கூட்டத்திடம்
அந்தக் கிளைக்காக
கெஞ்சிக்கொண்டிருந்தன மற்றவை
இறக்குகையில்
பிடி நழுவி
விழுந்த
அக்குழந்தைகளைப்
பிடிக்க ஓடியவனை
விரட்டிச் சென்றது
ஒரு நாய்
கடப்பாறைகள் இல்லையென
நிம்மதிப் பெருமூச்சுடன்
கலைந்து சென்றது கூட்டம்
பாவம்
பைத்தியம் பிடித்து
அங்கேயே கிடக்கிறது
மரம்....
உள்ளிழுத்துக்கொண்ட பின்பும்
தணியாக் கோபத்துடன்
அலைந்து திரிந்துகொண்டிருந்தன
அந்த மரத்தின் வேர்கள்
இதில்
அவன் தவறு ஏதுமில்லையென்று
கூடி நின்ற கூட்டத்திடம்
அந்தக் கிளைக்காக
கெஞ்சிக்கொண்டிருந்தன மற்றவை
இறக்குகையில்
பிடி நழுவி
விழுந்த
அக்குழந்தைகளைப்
பிடிக்க ஓடியவனை
விரட்டிச் சென்றது
ஒரு நாய்
கடப்பாறைகள் இல்லையென
நிம்மதிப் பெருமூச்சுடன்
கலைந்து சென்றது கூட்டம்
பாவம்
பைத்தியம் பிடித்து
அங்கேயே கிடக்கிறது
மரம்....
அந்த ஊரில் இருந்த
கடைசி வேப்ப மரமும்
கடைசிப் புளிய மரமும்
வெட்டப்பட்டப் பின்னர்
அவற்றிலிருந்தப் பேய்களைப்...
பிடித்து வந்து
கருணையுள்ளம் கொண்ட நான்
என் கவிதை வேலிகளுக்குள்
அடைத்து வைத்தேன்
பின்னர்
கருணையுள்ளம் கொண்ட
நான்
பக்கத்து ஊரில்
மரமிழக்கும்
பேய்களுக்காக
உண்ணாவிரதமிருக்கச்
சென்றேன்
அப்பொழுதொரு காகம்,
கடைசி மரமும்
வெட்டப்பட்டப் பின்
கடைசி மலையும்
தகர்க்கப்பட்டப் பின்
கடைசி ஆறும்
வற்றியப் பின்
கடைசி மனிதனும்
தற்கொலைச்
செய்துகொண்டப் பின்
இந்த பூமி
நிம்மதியாய்
கடைசி மூன்று
சுற்றுகளைச் சுற்றும்
என்று கரைந்தது
கருணையுள்ளம் கொண்ட
நான்
அக்காகத்திற்கு
சிலை வைக்க வேண்டுமென
உண்ணாவிரதத்தில்
பேசினேன்...
கடைசி வேப்ப மரமும்
கடைசிப் புளிய மரமும்
வெட்டப்பட்டப் பின்னர்
அவற்றிலிருந்தப் பேய்களைப்...
பிடித்து வந்து
கருணையுள்ளம் கொண்ட நான்
என் கவிதை வேலிகளுக்குள்
அடைத்து வைத்தேன்
பின்னர்
கருணையுள்ளம் கொண்ட
நான்
பக்கத்து ஊரில்
மரமிழக்கும்
பேய்களுக்காக
உண்ணாவிரதமிருக்கச்
சென்றேன்
அப்பொழுதொரு காகம்,
கடைசி மரமும்
வெட்டப்பட்டப் பின்
கடைசி மலையும்
தகர்க்கப்பட்டப் பின்
கடைசி ஆறும்
வற்றியப் பின்
கடைசி மனிதனும்
தற்கொலைச்
செய்துகொண்டப் பின்
இந்த பூமி
நிம்மதியாய்
கடைசி மூன்று
சுற்றுகளைச் சுற்றும்
என்று கரைந்தது
கருணையுள்ளம் கொண்ட
நான்
அக்காகத்திற்கு
சிலை வைக்க வேண்டுமென
உண்ணாவிரதத்தில்
பேசினேன்...
கவிஞன்
கவிஞனாகிவிடலாமென்று
முடிவெடுத்தப்பின்
புனைப்பெயரொன்றைத்
தேடத் தொடங்கினேன்
இடதுசாரிப் பெயர்களில்...
அர்த்தம் கேட்ப்பார்களென்பதால்
வலதுசாரிப் பெயர்களில்
திட்டுவார்களென்பதால்
ஆத்திகப்பெயர்களில்
இடிப்பார்களென்பதால்
நாத்திகப் பெயர்களில்
கருப்புச் சட்டையில்லையென்பதால்
புரட்சியாளர்கள் பெயர்களில்
எனக்குத் தோழர்களோ
தம்பிகளோ
இல்லையென்பதால்
புராணங்களில்
யாரும்
நம்ப மாட்டார்களென்பதால்
இலக்கியங்களில்
யாருக்கும் புரியாதென்பதால்
விளையாட்டுகளில்
'நேம் பிக்சிங்'ல் மாட்ட நேரிடுமென்பதால்
வண்ணங்களில்
மேற்சொன்ன ங்கள்
எடுத்துக்கொண்டது போக
மீதமேதுமில்லையென்பதால்
கவிஞன்
என்றே வைத்துக் கொண்டேன்
என்ன செய்யப் போகிறார்களோ..!
முடிவெடுத்தப்பின்
புனைப்பெயரொன்றைத்
தேடத் தொடங்கினேன்
இடதுசாரிப் பெயர்களில்...
அர்த்தம் கேட்ப்பார்களென்பதால்
வலதுசாரிப் பெயர்களில்
திட்டுவார்களென்பதால்
ஆத்திகப்பெயர்களில்
இடிப்பார்களென்பதால்
நாத்திகப் பெயர்களில்
கருப்புச் சட்டையில்லையென்பதால்
புரட்சியாளர்கள் பெயர்களில்
எனக்குத் தோழர்களோ
தம்பிகளோ
இல்லையென்பதால்
புராணங்களில்
யாரும்
நம்ப மாட்டார்களென்பதால்
இலக்கியங்களில்
யாருக்கும் புரியாதென்பதால்
விளையாட்டுகளில்
'நேம் பிக்சிங்'ல் மாட்ட நேரிடுமென்பதால்
வண்ணங்களில்
மேற்சொன்ன ங்கள்
எடுத்துக்கொண்டது போக
மீதமேதுமில்லையென்பதால்
கவிஞன்
என்றே வைத்துக் கொண்டேன்
என்ன செய்யப் போகிறார்களோ..!
வீடு திரும்புதல்
யாரோ
எதற்கோ விடும்
பெருமூச்சினில்
நாம் நம்
தொலைந்து போனக் கனவுகளை ...
உள்ளித்துக் கொள்கிறோம்
எதற்கோ விடும்
பெருமூச்சினில்
நாம் நம்
தொலைந்து போனக் கனவுகளை ...
உள்ளித்துக் கொள்கிறோம்
யாரோ
ஒருவரின் தொடுதலில்
சிலக் கனவுகளை
மீண்டும் உணர்கிறோம்
ஒரு சிலப் பயணங்கள்
சிலக் கனவுகளிடம்
கொண்டு சேர்க்கின்றன
சில ஊர்களில்
அவை
நமக்காக
எப்பொழுதும் காத்திருக்கின்றன
யாரோ ஒருவரின்
சிரிப்பினில்
அழுகையில்
வெற்றியில்
தோல்வியில்
ஏதோ
சிலப் பெயர்களில்
ஒரு மழை நாளில்
ஒரு பின்னிரவில்
எப்படியோ
மீண்டு விடுகின்றன
சிலக் கனவுகள்
அல்லது
கனவுகளாகிய
ஆசைகள்
சரியாய்ச் சொல்வதானால்
கனவாய்ப் போன
ஆசைகள்
பின்
தூக்க மென்பது
வீடு
திரும்புதல்
ஒருவரின் தொடுதலில்
சிலக் கனவுகளை
மீண்டும் உணர்கிறோம்
ஒரு சிலப் பயணங்கள்
சிலக் கனவுகளிடம்
கொண்டு சேர்க்கின்றன
சில ஊர்களில்
அவை
நமக்காக
எப்பொழுதும் காத்திருக்கின்றன
யாரோ ஒருவரின்
சிரிப்பினில்
அழுகையில்
வெற்றியில்
தோல்வியில்
ஏதோ
சிலப் பெயர்களில்
ஒரு மழை நாளில்
ஒரு பின்னிரவில்
எப்படியோ
மீண்டு விடுகின்றன
சிலக் கனவுகள்
அல்லது
கனவுகளாகிய
ஆசைகள்
சரியாய்ச் சொல்வதானால்
கனவாய்ப் போன
ஆசைகள்
பின்
தூக்க மென்பது
வீடு
திரும்புதல்
Saturday, June 6, 2015
யாருக்கு முத்தம்
மழையின் ஈரத்தை வாங்கி
உனக்குப் பரிசளித்தப் பின்
தருவதற்கு
என்னிடம்
இந்த வறண்ட வார்த்தைகளே
மீதமுள்ளன
இப்பொழுது
எங்கள் மூவரில்
யாருக்குத் தரப்போகிறாய்
உன் முத்தத்தை
என்பதை
நீயே முடிவுசெய்துகொள்..
உனக்குப் பரிசளித்தப் பின்
தருவதற்கு
என்னிடம்
இந்த வறண்ட வார்த்தைகளே
மீதமுள்ளன
இப்பொழுது
எங்கள் மூவரில்
யாருக்குத் தரப்போகிறாய்
உன் முத்தத்தை
என்பதை
நீயே முடிவுசெய்துகொள்..
Saturday, May 30, 2015
கொலைகள்
கொலைகள்
ஆண்மையென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
வீரமென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
கடமையென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
புனிதமென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
செய்தியாக்கப்பட்டன
கொலைகள்
பழகிவிட்டன
இவ்வுலகில்
தரப்படும் முத்தங்களின் சத்தங்கள்
டுமீல் டுமீலென்று கேட்கின்றன
ஏதோவொரு நம்பிக்கையில்
வளர்ந்து கொண்டிருக்கின்றன
கைவிடப்பட்ட கட்டிடங்களில்
இந்தச் செடிகள்...
ஆண்மையென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
வீரமென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
கடமையென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
புனிதமென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
செய்தியாக்கப்பட்டன
கொலைகள்
பழகிவிட்டன
இவ்வுலகில்
தரப்படும் முத்தங்களின் சத்தங்கள்
டுமீல் டுமீலென்று கேட்கின்றன
ஏதோவொரு நம்பிக்கையில்
வளர்ந்து கொண்டிருக்கின்றன
கைவிடப்பட்ட கட்டிடங்களில்
இந்தச் செடிகள்...
Thursday, May 28, 2015
மரம்....
மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த
அந்த இரண்டு சிறுமிகளைச் சுற்றிலும்
கடவுள்களின் ஆவிகள்
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன
எல்லா கடவுள்களின் பிணங்களையும்
உள்ளிழுத்துக்கொண்ட பின்பும்
தணியாக் கோபத்துடன்
அலைந்து திரிந்துகொண்டிருந்தன
அந்த மரத்தின் வேர்கள்
இதில்
அவன் தவறு ஏதுமில்லையென்று
கூடி நின்ற கூட்டத்திடம்
அந்தக் கிளைக்காக
கெஞ்சிக்கொண்டிருந்தன மற்றவை
இறக்குகையில்
பிடி நழுவி
விழுந்த
அக்குழந்தைகளைப்
பிடிக்க ஓடியவனை
விரட்டிச் சென்றது
ஒரு நாய்
கடப்பாறைகள் இல்லையென
நிம்மதிப் பெருமூச்சுடன்
கலைந்து சென்றது கூட்டம்
பாவம்
பைத்தியம் பிடித்து
அங்கேயே கிடக்கிறது
மரம்....
அந்த இரண்டு சிறுமிகளைச் சுற்றிலும்
கடவுள்களின் ஆவிகள்
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன
எல்லா கடவுள்களின் பிணங்களையும்
உள்ளிழுத்துக்கொண்ட பின்பும்
தணியாக் கோபத்துடன்
அலைந்து திரிந்துகொண்டிருந்தன
அந்த மரத்தின் வேர்கள்
இதில்
அவன் தவறு ஏதுமில்லையென்று
கூடி நின்ற கூட்டத்திடம்
அந்தக் கிளைக்காக
கெஞ்சிக்கொண்டிருந்தன மற்றவை
இறக்குகையில்
பிடி நழுவி
விழுந்த
அக்குழந்தைகளைப்
பிடிக்க ஓடியவனை
விரட்டிச் சென்றது
ஒரு நாய்
கடப்பாறைகள் இல்லையென
நிம்மதிப் பெருமூச்சுடன்
கலைந்து சென்றது கூட்டம்
பாவம்
பைத்தியம் பிடித்து
அங்கேயே கிடக்கிறது
மரம்....
Monday, May 25, 2015
நைட் ஷிப்ட் :-
அள்ளி அள்ளி
பூசிக்கொண்ட
அன்றைய வெயில் போலில்லை...
இன்றைய வெயில்
புகுந்த வீட்டிற்குப் போன
பெண் போலுணர்கிறேன்
இனி
திரும்ப
வழியில்லை
வெயிலிடம்
வெயிலில்லா வெயில்தான்
இன்றைய இரவுகள்
எனினும்
இவை
வெயிலில்லையே…
ஒளிச்சாரல் அடிக்காத
வீட்டின் கூரையில்
தொங்கிக்கொண்டுப் பார்க்கிறேன்
ஒரு பெரிய குடை
விரியும் வரை
காத்திருக்கிறேன்
வாலில்லை
எனவே நான்
எலியில்லை
வவ்வாலும் ஆந்தையுந்தானில்லை
நான் வாழுமிடம்
காடில்லை
போவது
வேட்டைக்குமில்லை
யாரேனும்
பகலினில் வாங்கி
இரவினில் குடுங்கள்
எங்களுக்கென
ஒரு சுதந்திரம்
எங்களுக்கும் சுதந்திரம்!
அள்ளி அள்ளி
பூசிக்கொண்ட
அன்றைய வெயில் போலில்லை...
இன்றைய வெயில்
புகுந்த வீட்டிற்குப் போன
பெண் போலுணர்கிறேன்
இனி
திரும்ப
வழியில்லை
வெயிலிடம்
வெயிலில்லா வெயில்தான்
இன்றைய இரவுகள்
எனினும்
இவை
வெயிலில்லையே…
ஒளிச்சாரல் அடிக்காத
வீட்டின் கூரையில்
தொங்கிக்கொண்டுப் பார்க்கிறேன்
ஒரு பெரிய குடை
விரியும் வரை
காத்திருக்கிறேன்
வாலில்லை
எனவே நான்
எலியில்லை
வவ்வாலும் ஆந்தையுந்தானில்லை
நான் வாழுமிடம்
காடில்லை
போவது
வேட்டைக்குமில்லை
யாரேனும்
பகலினில் வாங்கி
இரவினில் குடுங்கள்
எங்களுக்கென
ஒரு சுதந்திரம்
எங்களுக்கும் சுதந்திரம்!
உன்
கன்னப் பூக்களைக் கிள்ளி
என் கைகளில் தரும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
...
கன்னப் பூக்களைக் கிள்ளி
என் கைகளில் தரும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
...
உன்
சின்ன இதழ்களை
சொல்லி முடிக்கும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
நெற்றிப் பொட்டினில்
திரண்டு நிற்க வல்ல
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
பறக்கும் விழிகளை
பிடித்து நிறுத்தும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
அடர் புருவங்களில்
நாளன்று
தங்க வல்ல
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
காதுகள்
அணிந்துகொள்ள
தேர்ந்தெடுக்கும்
ஒரு வார்த்தையைக்
கவிதை யென்பேன்!
உன்
முகம் பார்த்தே பேசும்
இதையா கவிதை யென்பேன்?!
உன்
நெஞ்சுக் குழியினில்
விழுந்து எழ வல்ல
ஒரு சொல்லையே
கவிதை யென்பேன்!!
சின்ன இதழ்களை
சொல்லி முடிக்கும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
நெற்றிப் பொட்டினில்
திரண்டு நிற்க வல்ல
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
பறக்கும் விழிகளை
பிடித்து நிறுத்தும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
அடர் புருவங்களில்
நாளன்று
தங்க வல்ல
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
காதுகள்
அணிந்துகொள்ள
தேர்ந்தெடுக்கும்
ஒரு வார்த்தையைக்
கவிதை யென்பேன்!
உன்
முகம் பார்த்தே பேசும்
இதையா கவிதை யென்பேன்?!
உன்
நெஞ்சுக் குழியினில்
விழுந்து எழ வல்ல
ஒரு சொல்லையே
கவிதை யென்பேன்!!
வெளியே
மழை பெய்கிறது
நான்
ஒரு கவிதைக்காக
காத்திருக்கிறேன்...
அல்லது
உன்னிடமிருந்து
ஒரு குறுஞ்செய்திக்காக
அல்லது
நனைந்துகொண்டிருக்கிறேன்
அல்லது...
மழை பெய்கிறது
நான்
ஒரு கவிதைக்காக
காத்திருக்கிறேன்...
அல்லது
உன்னிடமிருந்து
ஒரு குறுஞ்செய்திக்காக
அல்லது
நனைந்துகொண்டிருக்கிறேன்
அல்லது...
உன்னிடமிருந்து
குறுஞ்செய்தி வருகிறது
எல்லாம்
மாறுகிறது
வெளியே
மழை பெய்கிறது
நான்
ஒரு கவிதைக்காக
காத்திருக்கிறேன்
அல்லது
உன்னிடமிருந்து
ஒரு குறுஞ்செய்திக்காக
அல்லது
நனைந்துகொண்டிருக்கிறேன்
அல்லது...
குறுஞ்செய்தி வருகிறது
எல்லாம்
மாறுகிறது
வெளியே
மழை பெய்கிறது
நான்
ஒரு கவிதைக்காக
காத்திருக்கிறேன்
அல்லது
உன்னிடமிருந்து
ஒரு குறுஞ்செய்திக்காக
அல்லது
நனைந்துகொண்டிருக்கிறேன்
அல்லது...
என் நீள் கவிதையில்
பல வார்த்தைகளைக் காணவில்லை
அல்லது
எழுதப்படவேயில்லை
...
பல வார்த்தைகளைக் காணவில்லை
அல்லது
எழுதப்படவேயில்லை
...
நம்பிக்கைகளால்
நிரப்பப்பட்டிருக்கிறது
என் கவிதை
அல்லது
அதுயென் நம்பிக்கை
எல்லா வரிகளிலும்
ஒரு வார்த்தை
இடம் பெற்றிருக்கிறது
அதுவும்
கரிக்கிறது
தண்டவளாமாகிப்போன வரிகளையும்
என்னால்
படித்து முடிக்க இயலாத
நீ தந்த
வரியையும் சேர்த்து
எல்லாம் கரைந்து போன
ஒரு மழை நாளில்
நான் வாழத் தொடங்குகிறேன்
அல்லது
வாழ்ந்து முடிக்கிறேன்
நிரப்பப்பட்டிருக்கிறது
என் கவிதை
அல்லது
அதுயென் நம்பிக்கை
எல்லா வரிகளிலும்
ஒரு வார்த்தை
இடம் பெற்றிருக்கிறது
அதுவும்
கரிக்கிறது
தண்டவளாமாகிப்போன வரிகளையும்
என்னால்
படித்து முடிக்க இயலாத
நீ தந்த
வரியையும் சேர்த்து
எல்லாம் கரைந்து போன
ஒரு மழை நாளில்
நான் வாழத் தொடங்குகிறேன்
அல்லது
வாழ்ந்து முடிக்கிறேன்
சொற்கள்
அந்தப் பாட்டி
பேசிக்கொண்டே இருந்தாள்
காலையும் மாலையும்
பேசுவாள்
பகலிலும்
எழுந்து எழுந்து
இரவிலும்
பேசுவாள்
சொல்லும் பொருளும்
முக்கியமல்ல அவளுக்கு
சில சமயம்
சொன்னதையே
திரும்பத் திரும்ப சொல்வாள்
அந்தப் பாட்டி
வயதாக வயதாக
சத்தமாகப் பேசினாள்
ஒவ்வொரு சொல்லுக்கும்
அதிக இடைவெளியின்றி
பேசினாள்
எஞ்சியிருக்கும்
சொற்களையும்
பேசிவிட வேண்டுமென்பதுபோல்
பேசினாள்
பேசினாள்
பேசினாள்
பேசினாள்...
அவளனுப்பிய/அனுப்பிக்கொண்டிருந்த
சொற்கள்
அவளிடம் திரும்பாத
ஒரு நாளில்
ஒருத்துளிக் கண்ணீரோடு
அவள் பேச்சு நின்றது
இப்பொழுதுதெல்லாம்
அவள் உயிருடன்
இருப்பதை
அவளைத் தொட்டுப் பார்த்து
உறுதிசெய்து கொள்கிறோம்
அவளும்
அப்படித்தான்
தெரிந்துகொள்கிறாள்
"பெரியாரும் பிராமணர்களும் - அபிலாஷ்"
பூணூலும், நாமமும் பிராமணர்கள் மட்டுந்தான் அணிகிறார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது. பூணூல் அணியும் மற்ற சமூக மக்களிடம் நீங்கள் பூணூல் அணிய வேண்டாம் என்று ஏன் யாரும் இதுவரை சொல்லவில்லை. சிலை உடைப்பு நடத்திய தி.க வினர் பெரியாரின் சிலை அவமதிப்பு நடக்கும்பொழுது ஏன் சலசலப்பும் பதபதைப்பும் அடையவேண்டும். அது வெறும் சிலைதானே? பெரியார் இல்லையே? சரி இதைப் பெரியாரும் பிராமணர்களும் என்ற கட்டுரையில் ஏன் சேர்த்திருக்கிறீர்கள். என்ன சொல்கிறீர்கள்? இதைச் செய்தது பிராமணர்கள் என்கிறீர்களா?
இன்று பிராமணர்கள் அசைவம் உண்ண ஆரம்பித்துவிட்டார்கள் என்று எழுதிவிட்டு அவர்களில் "தொட்டால் தீட்டு" பார்க்கும் ஒருவரைப் பற்றி எழுதுகிறீர்கள். விதிவிலக்கு என்ற வார்த்தையை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியுள்ளீர்கள். ஏனென்றால் அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்ட யாரும் இன்னமும் தீட்டு பார்க்க மாட்டார்கள். பிராமணர்கள் அல்லாத மற்ற சமூக மக்களும் விரதம் இருக்கும் நாட்களில் 'சுத்தமாக' இருக்க வேண்டும் என்று மற்றவர்களிடமிருந்தோ கடையிலோ சாப்பிடமாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ன விளக்கம் கொடுப்பீர்கள்? இது பிராமணர்களைப் பற்றி மட்டுமேயான பதிவு என்பதால் அதைப் பற்றி எழுதவில்லையா? தொட்டால் தீட்டு என்று ஒதுங்கிக்கொள்பவர்கள் 'தொட்டால்' கொல்வேன் என்று சாதியக் கொலைகளை செய்பவர்களுக்கு மேல் இல்லையா?
சடங்குகள் குறித்து விமர்சிக்கப்பட்டு வருவதால் பிராமணர்களுக்குள் புகைச்சல் இருக்கிறது சரி. ஆனால் அவர்கள் மட்டும்தான் சடங்குகள் செய்கிறார்களா? தமிழகத்தில் மற்ற சமூக மக்களிடம் இல்லையா? அவர்கள் மத்தியில் அந்த புகைச்சல் இல்லையென்றால் அவர்கள் மீது அந்த விமர்சனம் வைக்கப்படவில்லையென்றுதானே அர்த்தம். வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மத்தியில் புகைச்சல் ஏன் இல்லை? இருக்கிறது என்றால் ஏன் அதைப் பற்றி நீங்கள் எழுதவில்லை. மறுபடியும் இது பிராமணர்களைப் பற்றி மட்டுந்தான் எழுதப்பட்ட கட்டுரை என்பதாலா? தமிழகத்தின் பல முனீஷ்வரன், அய்யனார்,அம்மன் கோவில்களில் "பூசாரிகள்" பிராமணர்கள் அல்ல. அங்கு நடக்கும் சடங்குகள் எல்லாம் சடங்குகள் இல்லையா என்ன?
தமிழகத்தில் பிராமணர்கள் மீது காழ்ப்பும் வெறுப்பும் உருவாக்கப்பட்டு அது இன்றளவும் அணையாமல் பார்த்துக்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனென்றால் பெரியரால் மத்த சமூக மக்களிடமும் இருந்த/இருக்கும் சாதிய வெறியை, மூட நம்பிக்கைகளை களைய முடியவில்லையென்பதே உண்மை. அதை ஒரு சமூக மக்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி மறைத்துவருகிறார்கள்.
ஒவ்வொரு சமூக மக்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையை வாழ உரிமையுள்ளது. நீ என்னைப்போல் பேச வேண்டும், என்னைப்போல் உடையணிந்து கொள்ள வேண்டும், என்னைப் போல் எல்லோருக்கும் வீடு கொடுக்க வேண்டும் என்று சொல்வது அடக்குமுறை, ஜன நாயகம் அல்ல. "பந்து போயிண்டே இருக்கு" என்பது அவரையும் மீறி வந்த ஒன்று. நீங்கள் சொல்வது போல் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்த பேசியிருந்தால் ஒவ்வொரு வார்த்தையும் மாறியிருக்கும். நீங்களும் இந்த ஒற்றை வார்த்தையைப் பிடித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். தொடர்ந்து கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுவதால் பிராமணப் பேச்சு வழக்கு பிராமணர்களுக்கு மத்தியிலேயே அழிந்து வருகிறது என்பதுதான் உண்மை.
பிராமணர்களின் சைவ உணவுப் பழக்கத்தை நீட்டி நீட்டி அது உலகையே அழிக்க வல்லது என்று நீட்டியிருக்கும் நீங்கள் தீட்டைக் கடைப்பிடிப்பது பற்றி தலித்துக்களுக்கு மத்திய சாதியினர்மீது புகார்கள் இருக்கலாம் என்று ஒற்றை வரியில் கடந்திருப்பது இந்தக் கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.
தொடர்ந்து தமிழகத்தில்,மக்களை பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதவர்கள் என்று இரட்டைப்படுத்திவரும் முற்போக்காளர்கள்தான் நம் சாபக்கேடுகள். ஏனென்றால் இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான சாதிகளை இரண்டாகப் பிரிப்பதன்மூலம் சாதியக் கொடுமைகளை மறைமுகமாக வளர்த்துதான் வருகிறார்கள். சாதியக் கொடுமைகள் என்பதை பிராமணர்கள் மூலம் இன்று தமிழகம் அனுபவித்து வரவில்லை. சாதிய அடுக்குளில் கடைசியில் இருக்கும் மக்களின் மீது மற்ற மொத்த சமூகமும் ஏறி உட்கார்ந்திருக்கிறது என்பதை ஒற்றை வரிகளில் கடந்து போக முடியாது.
"பிராமணர்கள் இந்துமதத்தை ஆரோக்கியமாய் வைத்திருக்கவும், தம்மை பொதுசமூகத்துடன் ஒன்றிணைக்கவும் மதத்தை ஒரு கண்ணாடி கோப்பையை போல் பற்ற கற்க வேண்டும். " இதைவிட வேடிக்கையான வரி இருக்க முடியாது. இந்து மதத்தை ஆரோகியமாக வைத்திருக்க பிராமணர்களுக்கு அறிவுரைக் கூறுவது கேலிக்கூத்து. பிராமணர்கள் மட்டுந்தான் இந்துமதமா? நீஙகள், எண்ணிக்கை அளவில் சிறுபான்மையாக இருக்கும் சமூகத்திடம் அவர்களின் மதத்தைக் காக்க அறிவுரை கூறுகிறீர்கள் என்றால் அந்தச் சிறுபான்மை சமூகத்திடந்தான் ஒட்டுமொத்த அதிகாரம் இருக்கிறது என்று அர்த்தமாகிறது. இவ்வளவுகாலம் நடந்த போராட்டங்கள் பயனளிக்கவில்லை என்று அர்த்தமாகிறது. அல்லது மற்ற சமூக மக்களின் இடங்களை நீங்கள் இன்னமும் தரவில்லை என்பதைக் காட்டுகிறது.
மற்ற சமூக மக்களின் குறைகளை ஏன் சுட்டிக்காட்ட மறுக்கிறீர்கள் என்று கேட்பது அபத்தமல்ல. ஒன்று, இங்கு ஜனநாயகம் இல்லை அல்லது உங்களுக்குத் தைரியம் இல்லை. ஏனென்றால் சமூகம் என்பது, அது எதுவயப்பட்டிருந்தாலும், ஒட்டு மொத்த மக்களும் சேர்ந்ததுதான். எங்கு குறைகள் இருந்தாலும் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
அடித்து உடைக்காமல் எதையும் வளர்க்க முடியாது என்பது உண்மையல்ல. தீவிரவாதம். :) அகிம்சை மூலம் சுதந்திரமடைந்த நாட்டில் ஒரு எழுத்தாளர்/ ஒருஆசிரியர் இப்படிக் கூறுவது அது அடைந்திருக்கும் அவல நிலையைக் காட்டுகிறது.

Monday, April 20, 2015
பக்கத்து வீட்டு மரங்கள்…
மழையில் நனைந்த பின்
தலை துவட்டிக் கொள்ளும்
என்னைப் பார்த்து
சிரிக்கின்றன
பக்கத்து வீட்டிலிருக்கும்
மரங்கள்
அவைகளின் வாயையை
அடைக்க ஒரு கவிதையை
எழுதி வீசினேன்
மடக்கி மடக்கி
எழுதப்பட்ட அதைப்பார்த்துச்
சத்தமாய் சிரிக்கின்றன
ஒரே யடியாய்
வளர்ந்திருக்கும் அவைகள்!
மனம்
என் வாழ்வின்
ஆகச் சிறந்த நாளை
சில வார்த்தைகளுக்குள்
அடைத்து வைத்திருந்தேன்
நேற்றுப் பிறந்த
சில வார்த்தைகளின் மூலம்
அது
எப்போதோ
தப்பிவிட்டிருந்தது
தெரிய வந்தது
அதை இழுத்துவந்து
முன்பை விட
பிரம்மாண்டமான வார்த்தைகளுக்குள்
சிறை வைக்கப் பார்க்கிறேன்
வெகு சுலபமாய்
தப்ப வைத்துக்கொண்டே
இருக்கிறது
அந்த ஒற்றை
வார்த்தை
ஆகச் சிறந்த நாளை
சில வார்த்தைகளுக்குள்
அடைத்து வைத்திருந்தேன்
நேற்றுப் பிறந்த
சில வார்த்தைகளின் மூலம்
அது
எப்போதோ
தப்பிவிட்டிருந்தது
தெரிய வந்தது
அதை இழுத்துவந்து
முன்பை விட
பிரம்மாண்டமான வார்த்தைகளுக்குள்
சிறை வைக்கப் பார்க்கிறேன்
வெகு சுலபமாய்
தப்ப வைத்துக்கொண்டே
இருக்கிறது
அந்த ஒற்றை
வார்த்தை
பிறழ்வு
இனி முடியாதென
பேசத் தொடங்குகிறது
மௌனம்
உள்ளிழுக்கப்பட்ட
மூச்சிற்கு
திரும்ப
வழியில்லை
எங்கிருந்தோ
விழுந்து தெறிக்கிறது
உயிரின் பேரருவி
கண்களிலிருந்து
ஒழுகுவதன்
மருஊ
கண்ணீர்
அக்கணமே
உயிருடன்
வெடித்துச் சிதறுகிறது
நான்
அதற்கு முன்
ஒரு குயிலின் கூவலை
கேட்கக் கடவது
என்றென்னைச்
சபித்தது யார்
Sunday, April 12, 2015
பின் நவீனத்துவ தற்கொலை
வீடு முழுவதும்
புத்தகங்கள்
கவர் பிரிக்கப்படாமல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஒரு இருபத்தியேழு
அவை மூச்சு முட்டி
இறந்து கொண்டிருக்கின்றன – நான்
புத்தகங்கள் தாசிகளைப் போன்றவை
தொடத் தொடத்தான்
அவை உயிர் வாழும் – நண்பன்
இதை
நான் ஒரு கவிதையாகவும்
அவன்
ஒரு கதையாகவும்
எழுதத்தொடங்கினோம்
அப்பொழுது
ஷெல்ப்பின் மேலிருந்து
ஒரு புத்தகம்
கீழே விழுந்தது
நாங்கள்
தற்கொலை என்று
பெயர் வைத்தோம்
மனம்
என் வாழ்வின்
ஆகச் சிறந்த நாளை
சில வார்த்தைகளுக்குள்
அடைத்து வைத்திருந்தேன்
நேற்றுப் பிறந்த
சில வார்த்தைகளின் மூலம்
அது
எப்போதோ
தப்பிவிட்டிருந்தது
தெரிய வந்தது
அதை இழுத்துவந்து
முன்பை விட
பிரம்மாண்டமான வார்த்தைகளுக்குள்
சிறை வைக்கப் பார்க்கிறேன்
வெகு சுலபமாய்
தப்ப வைத்துக்கொண்டே
இருக்கிறது
அந்த ஒற்றை
வார்த்தை
ஆகச் சிறந்த நாளை
சில வார்த்தைகளுக்குள்
அடைத்து வைத்திருந்தேன்
நேற்றுப் பிறந்த
சில வார்த்தைகளின் மூலம்
அது
எப்போதோ
தப்பிவிட்டிருந்தது
தெரிய வந்தது
அதை இழுத்துவந்து
முன்பை விட
பிரம்மாண்டமான வார்த்தைகளுக்குள்
சிறை வைக்கப் பார்க்கிறேன்
வெகு சுலபமாய்
தப்ப வைத்துக்கொண்டே
இருக்கிறது
அந்த ஒற்றை
வார்த்தை
Sunday, March 29, 2015
பனித்துளி
புற்களின்
நுனிநாக்கு கூண்டுக்குள்
சிறைப்பட்டுக் கிடக்கிறது
நேற்றிரவு
ரகசியமாய்...
பெய்த மழை
அவை
பனித்துளிகளென
எல்லோரும் பொய்சாட்சி செல்கிறார்கள்....
நுனிநாக்கு கூண்டுக்குள்
சிறைப்பட்டுக் கிடக்கிறது
நேற்றிரவு
ரகசியமாய்...
பெய்த மழை
அவை
பனித்துளிகளென
எல்லோரும் பொய்சாட்சி செல்கிறார்கள்....
காதற் கதைகள்
தோற்றுப்போன
என் காதலை
நான்
எப்போதோ
மறந்து போய்விட்டுருந்தேன்
என்பதை
அவன் காதலைப் பற்றி அவனும்
அவள் காதலைப் பற்றி அவளும்
சொல்ல
நினைவுக்கு வந்தது
அய்யோ என அலறியது மனம்
அவசர அவசரமாய்
ஒரு கதை எழுதுகிறேன்
கதை முழுவதும்
கண்ணீர் வடிக்கிறேன்
அவர்களிடம்
நான் கொட்டிய தண்ணீர்
குளமாயிற்று என்கிறேன்…
சற்றே வித்தியாசமாக…
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி நடந்து வந்தார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி பேசினார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி சிரித்தார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லாரும்
ஒரே மாதிரி காசு கேட்டார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி ஆசிர்வதித்தார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் போனபின்
அங்கிருந்த எல்லாவற்றின் அர்த்தமும்
சற்றே
மாறித்தான் போயிருந்தது…
பசியின் ருசி
“இது அப்படி ஒன்றும் சுவைக்கவில்லை,
இது அப்படி ஒன்றும் சூடாகவும்
இல்லை,
இது அரிய வகை உணவுமில்லை,
இதை தினமும் வேறு உண்கிறாய்,
பின்
எப்படி இப்படி ரசித்து உண்கிறாய்? “
என்று கேட்கும் நண்பனிடம்
நான்
பசியில் அலைந்த நாட்களைத்
தொட்டு உண்கிறேன் என்பதை
எப்படிச் சொல்ல…
Thursday, March 19, 2015
என் எல்லா கதைகளையும்
உன்னிடம் சொல்கிறேன்
என் எல்லா கவிதைகளையும்
உன்னிடம் சொல்கிறேன்
என் எல்லா கனவுகளையும்...
உன்னிடம் சொல்கிறேன்
எல்லாம் ஒருநாள்
தீர்ந்து போய்விடுகின்றன
பின்
எல்லாவற்றிர்க்கும்
முற்றுப்புள்ளி வைக்கிறேன்
ஒரு சிறிய இடைவெளியில்
அப்புள்ளியிலிருந்து மை கசிகிறது
ஒரு கோட்டைக் கிழிக்கிறது
அக்கோட்டை
இழுத்து இழுத்து
உன் முகம் வரைகிறேன்
அதைப் பார்த்து
ஒரு கவிதை பாடுகிறேன்
பின்
அது பிறந்த கதையை
உன்னிடம் கூறுகிறேன்
உன்னிடம் சொல்கிறேன்
என் எல்லா கவிதைகளையும்
உன்னிடம் சொல்கிறேன்
என் எல்லா கனவுகளையும்...
உன்னிடம் சொல்கிறேன்
எல்லாம் ஒருநாள்
தீர்ந்து போய்விடுகின்றன
பின்
எல்லாவற்றிர்க்கும்
முற்றுப்புள்ளி வைக்கிறேன்
ஒரு சிறிய இடைவெளியில்
அப்புள்ளியிலிருந்து மை கசிகிறது
ஒரு கோட்டைக் கிழிக்கிறது
அக்கோட்டை
இழுத்து இழுத்து
உன் முகம் வரைகிறேன்
அதைப் பார்த்து
ஒரு கவிதை பாடுகிறேன்
பின்
அது பிறந்த கதையை
உன்னிடம் கூறுகிறேன்
காதலில்
காற்புள்ளிக்கும்
முற்றுப்புள்ளிக்கும்
ஒரே வேலை....
காற்புள்ளிக்கும்
முற்றுப்புள்ளிக்கும்
ஒரே வேலை....
Saturday, January 24, 2015
வேண்டாத விருந்தாளி
எனக்காக எப்போதும் வரும்
இந்த நிலவிடம்
எனக்கொரு காதலும் இல்லை
தேடித் தேடி வந்த போதிலும்
இறகில்லா பறவையைக் காண்பதில்
எனக்குத் துளி விருப்பமுமில்லை
எல்லோரும் கூடடைந்தபின்
இந் நிலவோடு
தனித்திருக்கும் தருணங்களை
நான்
ஒருபோதும் விரும்பியதில்லை
வீடில்லாக் கூறைமேல்
வேண்டாத விருந்தாளி
இந்த நிலவிடம்
எனக்கொரு காதலும் இல்லை
தேடித் தேடி வந்த போதிலும்
இறகில்லா பறவையைக் காண்பதில்
எனக்குத் துளி விருப்பமுமில்லை
எல்லோரும் கூடடைந்தபின்
இந் நிலவோடு
தனித்திருக்கும் தருணங்களை
நான்
ஒருபோதும் விரும்பியதில்லை
வீடில்லாக் கூறைமேல்
வேண்டாத விருந்தாளி
Subscribe to:
Comments (Atom)